நாட்டை பொறுப்பேற்க எவரும் முன்வராத தருனத்தில் அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால் பாராளுமன்ற கட்டடம் அழிக்கப்பட்டு, இன்று பாராளுமன்ற கூட்டம் மரத்தடியில் தான் கூடவேண்டியிருக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அதன் பின்னர், இரண்டு வருடங்களில் நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளதை புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (07) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிதி நிலைமை குறித்த அறிக்கையானது பொருளாதாரத்தின் விதிவிலக்கான வளர்ச்சி குறித்த புள்ளிவிபரங்களை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், பொருளாதார வளர்ச்சி, சுற்றுலாத் தொழில், மாற்று விகிதம், சுற்றுலா வருவாய் மற்றும் அரசாங்க வருவாய் ஆகியவை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் நுழைந்த சாம்பியா, கானா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் ஒப்பீட்டு நிலைமையை முன்வைத்த அமைச்சர், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்தார்.
திட்டம் தொடங்கப்பட்டபோது ஜாம்பியாவில் 24.6%ஆக இருந்த பணவீக்க விகிதம் இன்று 15.2%ஆக உள்ளது. 69%ஆக இருந்த பணவீக்கம் தற்போது வீதத்தை 1.7%ஆக குறைக்க முடிந்துள்ளது.
சாம்பியா, கானா மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளுடன் ஒப்பிடும்போது பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இலங்கை சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM