கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகனான துருவா சர்ஜா அதிரடி எக்சன் நாயகனாக நடித்திருக்கும் 'மார்ட்டின்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஏ. பி. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மார்ட்டின்' எனும் திரைப்படத்தில் துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேசி ஜெயின், சிக்கன்னா, மாளவிகா அவினாஷ், அச்யுத்குமார், நவாப் ஷா, ரோஹித் பதக், நாதன் ஜோன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணி சர்மா மற்றும் ரவி பஸ்ரூர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். அதிரடி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வாசவி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் கே. மேத்தா மற்றும் சூரஜ் உதய் மேத்தா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதினோராம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த முன்னோட்டத்தில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் இடம் பிடித்திருப்பதாலும் பாகிஸ்தானின் மண்ணில் இந்தியன் ஒருவர் பிரவேசிப்பதும் முன்னோட்டம் முழுவதும் அதிரடி எக்சன் காட்சிகள் நிறைந்திருப்பதாலும் எக்சன் பிரியர்களுக்கு மாபெரும் விருந்தாக இந்த படம் அமையும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் காரணமாகவே இந்த முன்னோட்டம் வெளியிடப்பட்ட குறுகிய கால அவகாசத்திற்குள் பன்னிரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM