இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிராக 3 ஆவதும் முக்கியமானதுமான ஒருநாள் போட்டி சற்று நேரத்தில் கொழும்பு ஆர் . பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், இன்றைய போட்டிக்கான நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சரித்த அசலக்க முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார். அந்த வகையில் இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபடும்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வெற்றி தோலிவியின்றி சமநிலையில் நிறைவடைந்தது. 2 ஆவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்றையதினம் 3 ஆவதும் மிக முக்கியமானதுமான போட்டி இடம்பெறுகின்றது.
இப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் 27 வருடங்களின் பின் அதவது 1997 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அணி இந்திய அணியை வெற்றி கொள்ளும் ஒருநாள் தொடராக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப் போட்டியில் இலங்கை அணியில் அகில தனஞ்சயவுக்கு பதிலாக மகீஷ் தீக்சன இடம்பெறுகின்றார். இந்திய அணியில் இரு மாற்றங்கள் கே.எல்.ராகுல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்குப் பதிலாக ரிஷப் பந்த் மற்றும் ரியன் பராக் ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM