(எம் ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார். இந்த நிலைப்பாட்டில் தான் நாங்களும் உள்ளோம். இருப்பினும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தவில்லை. ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிபந்தனைகளை நிச்சயம் மறுசீரமைப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) இடம்பெற்ற 'அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை' தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து எதிர்கால அரசியலில் ஈடுபடவுள்ளதால் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மதுர விதானகே என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்னைக்கிறார்.ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களியுங்கள் என்று இவர் எமது பிரதேச மக்களிடம் குறிப்பிட்டால் பிரதிபலன் எவ்வாறு அமையும் என்பதை நான் அறிவேன்.எவ்வாறு கட்சி மாறுகிறார்கள் என்பதை அறியவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களாக அனைவரும் சஜித் பிரேதாசவுடன் வெளியேறினார்கள்.டி.எஸ்.சேனாநாயக்கவின் கொள்கைக்கு அமையவே நாங்கள் செயற்படுகிறோம்.ஆனால் இவர்கள் அவ்வாறில்லை.எவ்வித கொள்கையும் இல்லாமல் செயற்படுகிறார்கள்.இவர்கள் குறிப்பிடுவதை கேட்பதற்கு மக்கள் முட்டாள்களல்ல,
2022.05.10 ஆம் திகதி நான் பதிவிட்ட எக்ஸ் வலைத்தள பதிவை சபைக்கு சமர்ப்பிப்பதாக இவர் (மதுர விதானகே) குறிப்பிடுகிறார்.அந்த பதிவயை முழுமையாக அவர் சமர்ப்பிக்கவில்லை.ஆகவே நான் அவற்றை சமர்ப்பிக்கிறேன்.
2022 ஆம் ஆண்டு நெருக்கடியின் போது நாடு மூழ்கும் முன்னர் சர்வதேச நாணய நிதியத்தை நாடுங்கள் என்று குறிப்பிட்டோம்.நாங்கள் குறிப்பிட்டதை போன்று நாணய நிதியத்துக்கு சென்றிருந்தால் கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியிருக்கமாட்டார்.இவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை தேடிச் சென்றிருக்கமாட்டார்கள்.அன்று தான்தோன்றித்தனமாக செயற்பட்டு விட்டு இன்று பொருளாதாரம் பற்றி எங்களுக்கு போதனை செய்கிறார்கள்.
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்குமாறு கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்த போது நந்நலால் வீரசிங்க என்னை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு,'ஹர்ஷ எனக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்,நான் பதவியேற்றால் எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்குவீர்களா' என்றார்.அச்சமில்லாமல் வாருங்கள்,முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் ' என்று குறிப்பிட்டோம்.இதனை அவரிடமே கேளுங்கள்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம் என்று குறிப்பிடும் அரசாங்கம் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது 18 சதவீத வரி விதித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை கடுகளவும் மாற்றமுடியாது என்று குறிப்பிடுவது பைத்தியகாரதனம்.நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களே இன்று எதனையும் மாற்ற முடியாது என்று குறிப்பிடுகிறார்கள்.
பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்கிறோம்.ஆனால் பொருளாதார மறுசீரமைப்பில் பாதிக்கப்படும் மக்கள் கூட்டத்தை ஜனாதிபதி மறந்து விட்டார்.பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் விடுவிப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் கடன் என்றால் கடன்,வளர்ச்சி என்றால் வளர்ச்சி என்ற நிலையில் உள்ளது.நாங்கள் அந்த நிலைப்பாட்டில் இல்லை.ஏற்றுக்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்களை நாங்கள் நிச்சயம் மாற்றியமைப்போம்.இதனை சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்ட பிரதிநிதியிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM