தமிழகத்தில் கடலூர் பிரதேசத்தில் சமீப காலமாக பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள எள்ளேரி கிராமத்தில் வித்யா என்பவர் கடையொன்றில் வாங்கிய முட்டையை சமைப்பதற்காக உடைத்தபோது முட்டை வித்தியாசமாக இருந்ததை அவதானித்துள்ளார். இதையடுத்து மற்றொரு கடையில் வேறொரு முட்டையை வாங்கியுள்ளார். அந்த முட்டையும் இதேபோல் இருந்துள்ளது. 

இது தொடர்பாக அக்கம்பக்கத்தினரிடம் முட்டையை காட்டியபோது அது பிளாஸ்டிக் முட்டை என தெரியவந்துள்ளது. அந்த முட்டைக்கு தீவைத்தபோது அது பற்றி எரிந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சமீப காலமாக கடலூர் மாவட்ட கிராமப்புற பகுதிகளில் பிளாஸ்டிக் முட்டைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் முறைப்பாடு தெரிவித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.