சச்சின் டெண்டுல்கரின் பள்ளித்தோழர், கிரிக்கெட் இணை, முன்னாள் இந்திய இடது கை பேட்டர் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக, அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் உதவி புரிய வேண்டும் என்றும் இன்னும் பலவிதமாகவும் தங்கள் வேதனைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வீடியோவில் வினோத் காம்ப்ளியால் நிற்கக் கூட முடியவில்லை. நடப்பது அசாத்தியமான நிலையில் மற்றவர்கள் உதவியுடன் கைத்தாங்கலாக அவர் அழைத்து செல்லப்பட்டது ரசிகர்களிடையேயும் கிரிக்கெட் வட்டாரங்களிலும் கடும் வேதனை அலைகளைத் தோற்றுவித்துள்ளது. வினோத் காம்ப்ளியால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. கால்கள் பலமிழந்தது போல் உள்ளன. கால்களும் நேராக இல்லை.
பலரும் வினோத் காம்ப்ளியின் போதைப் பழக்கத்தினால் ஏற்பட்ட விளைவு என்று பதிவிட, மற்ற சிலர் சில நாட்களாகவே அவரது உடல்நலம் சீரழிவு கண்டுள்ளது என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே விவாதங்களையும், கவலைகளையும், அக்கறைகளையும் கிளப்பியுள்ளது.
கிரிக்கெட் உலகில் 1990-களில் சச்சின் டெண்டுல்கர் நுழைவையடுத்து வினோத் காம்ப்ளியின் நுழைவும் தூள் கிளப்புவதாக அமைந்தது. அதிரடி இடது கை வீரராக இரண்டு இரட்டைச் சதங்களை அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுத்தார். 1993-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் வரலாற்று வெற்றியில் இவரது பெயர் உச்சம் பெற்றது. இத்தனைப் பிரமாதமான திறமை இருந்தும் 1996 உலகக் கோப்பை அரையிறுதியில் காலிறுதிப் போட்டியில் ஈடன் கார்டனில் டாஸ் வென்று பேட் செய்வதற்குப் பதிலாக கேப்டன் அசாருதீன் பீல்டிங்கை முதலில் தேர்வு செய்ததையடுத்து இந்திய அணி களத்தில் 120/8 என்று மடிய ரசிகர்கள் உள்ளே புகுந்து கலாட்டாவிலும் ரகளையிலும் ஈடுபட ஆட்டம் கைவிடப்பட்டது.
அப்போது வினோத் காம்ப்ளி அழுதுகொண்டே பெவிலியன் சென்ற காட்சியை யாரும் மறப்பதற்கில்லை. இந்தியா வெளியேறியது. அப்போது இவர் கேப்டன் அசாருதீனை அவரின் அறைக்குச் சென்று கடுமையாக வசையை பொழிந்ததாகவும் செய்திகள் உலாவின. அதன் பிறகே இவரது கரியர் கொஞ்சம் பின்னடைவு கண்டது. பிறகு காயங்கள், சொந்த நடத்தை விவகாரங்கள் ஆகியன ஒரு அற்புதமான உலக பிரசித்தி பெற வேண்டிய வீரரை அழித்து விட்டது.
17 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே ஆடிய வினோத் காம்ப்ளி 4 சதங்கள் 3 அரைசதங்களுடன் 227 என்ற அதிகபட்ச ஸ்கோருடன் 1084 ரன்களை 54.20 என்ற சராசரியில் எடுத்து ஓய்வு அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது யாருடைய துரதிர்ஷ்டம்?. 104 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2477 ரன்களை 2 சதங்கள் 14 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் இவரது சராசரி 59.67.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM