சீயான் விக்ரம் - ஜீ.வி. பிரகாஷ் குமார்- பா. ரஞ்சித் கூட்டணியில் உருவான 'தங்கலான்' படத்தின் ஓடியோ வெளியீடு!

07 Aug, 2024 | 11:43 AM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராகவும், சர்வதேச நட்சத்திரமாகவும் ஜொலிக்கும் சீயான் விக்ரம் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தின் ஓடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹொலிவுட் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்தியாவின் தென்னக பகுதியில்  அமைந்த கோலார் தங்க வயல் பின்னணியில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

எதிர்வரும் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது படக்குழுவினருடன் மூத்த நடிகர் சிவக்குமார், தயாரிப்பாளர்கள் அபினேஷ் இளங்கோவன், இயக்குநர் ஏ. எல். விஜய் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர். 

இந்நிகழ்வில் சீயான் விக்ரம் பேசுகையில், '' தங்கலான் யார்? அவர் ஒரு வீரர். ஒரு கூட்டத்தின் தலைவர். இவற்றையெல்லாம் கடந்து அவருக்கென்று ஒரு இலக்கு இருக்கிறது. குடும்பத்தை நேசித்து கொண்டும், தன் மக்களை நேசித்து கொண்டும் அதை அடைவதற்காக கடுமையாக போராடுகிறான். ஏராளமான இழப்புகளை எதிர்கொள்கிறான். தன்னுடைய மக்களுக்கு தங்கத்தையோ அல்லது விடுதலையோ வழங்க வேண்டும் என விரும்புகிறான். பல தலைமுறைகளாக கிடைக்காத ஒரு விடயத்தை தேடி அவனுடைய பயணம் இருக்கிறது. அதை அடைந்தானா? இல்லையா? என்பதை தான் இந்த படத்தில் விவரித்திருக்கிறோம். 

இந்தப் படத்தின் கதையை பா. ரஞ்சித் என்னிடம் சொன்னபோது தங்கலானுக்கும், எனக்கும் ஏதோ ஒரு ஆன்மீக ரீதியான தொடர்பு இருக்கிறது என உணர முடிந்தது. அதனால் கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன் ஆனால் இதில் நிறைய சவால்கள் இருந்தது. அதை அனைத்தையும் உடன் நடித்த சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழுமையான பங்களிப்புடன் எதிர்கொண்டோம். தங்கலான் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.  இது என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படம். நிச்சயம் பிரம்மாண்டமான வெற்றியை பெரும் என நம்புகிறேன். ': என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயன்தாரா - சுந்தர். சி கூட்டணியில்...

2024-09-17 15:35:04
news-image

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய்...

2024-09-17 15:20:48
news-image

சத்யராஜ் நடிக்கும் 'ஜீப்ரா' படத்தின் மோஷன்...

2024-09-17 15:20:18
news-image

பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும்...

2024-09-17 13:59:28
news-image

ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி வரும் விஜய்

2024-09-17 13:35:40
news-image

அரசியலில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு குட்டிக்கதை...

2024-09-17 11:12:46
news-image

'கார்த்தி 29' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

2024-09-17 10:55:46
news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08