கொலன்னாவ, மீட்டொத்தமுல்லையில் குப்பைமேடு சரிந்து விழுந்ததில் 12 வயது சிறுமியொருவரின் சடலம் இடிப்பாடுகளினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனர்த்தத்தில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 50 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குப்பைமேடு சரிந்ததினால் அருகில் இருந்த தொடர் குடிமனைகள் அகப்பட்டுள்ளதாகவும்,அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.