இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 19 தமிழக மீனவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருடச் சிறைத் தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை (06) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களே மேற்கண்ட நிபந்தனையின் அடிப்படையில் நீதிவானால் விடுவிக்கப்பட்டனர்.
மீன்பிடிக்குப் பயன்படுத்தப்பட்ட படகுகளின் ஓட்டிகள் மூவரும் தலா நான்கு மில்லியன் ரூபா அபராதம் செலுத்த வேண்டுமெனவும், அதனைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒருவருடக் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டி வருமெனவும் நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
இதேவேளை - கடந்த மாதம் 23ஆம் திகதி நெடுந்தீவில் கைதான ஒன்பது இந்திய மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடித்தும் நீதிவான் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM