கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், தெற்கு அதிவேக வீதியின் சேவா சதுக்கத்தில் வைத்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டு பின்னர் அதுருகிரிய பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை தர்கா நகரை சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்டசந்தேக நபர், இந்த கொலை சம்பவத்திற்காக இரு துப்பாக்கிதாரிகளை ஆயுதங்களுடன் அம்பலாங்கொட பிரதேசத்தில் இருந்து அத்துருகிரிய பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வாடகை வீடொன்றையும் வாடகை வண்டியையும் பெற்றுக்கொடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய கார் கதிர்காமம் பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM