'ஆர் ஆர் ஆர்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜூனியர் என்டிஆர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தேவரா' எனும் படத்தில் இடம்பெற்ற 'பத்தவைக்கும் பார்வை காரா..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கொரட்லா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'தேவரா' எனும் திரைப்படத்தின் ஜூனியர் என்டிஆர், சையத் அலி கான், ஜானவி கபூர், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நந்தமூரி தாரக ராமாராவ் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை நந்தமூரி கல்யாண் ராம் வழங்குகிறார்.
இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'பத்தவைக்கும் பார்வைக் காரா..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் எழுத பின்னணி பாடகி தீப்தி சுரேஷ் பாடியிருக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் வாரிசான ஜானவி கபூரின் இளமையான தோற்றம்+ அனிருத்தின் மயக்கும் காதல் மெட்டு+ விக்னேஷ் சிவனின் இளமை ததும்பும் காதல் வரிகள் +பாடகி தீப்தி சுரேஷின் வசீகரிக்கும் குரல் + ஆகியவற்றின் கலவையாக உருவாகி இருக்கும் இந்த பாடல் இளைய தலைமுறையின் ஃபேவரைட்டாக மாறி இருக்கிறது.
இதனால் தான் இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இருபத்தைந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM