(நெவில் அன்தனி)
பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் 2ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
ஸ்டேட் டி பிரான்ஸ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (06) இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் 2ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அருண தர்ஷன, அப் போட்டியை 44.75 செக்கன்களில் ஓடி முடித்து 5ஆம் இடத்தைப் பெற்றார்.
ஆனால் மூன்று அரை இறுதிப் போட்டிகள் முடிவில் அருண தர்ஷன TR 17.2.3 விதியை மீறும் வகையில் மற்றைய தடத்தில் கால் பதித்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மூன்று அரை இறுதிப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 6 வீரர்களும் அடுத்த அதிசிறந்த நேரங்களைப் பதிவுசெய்த இருவருமாக 8 வீரர்கள் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.
முதலாவது அரை இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் குவின்சி ஹோல் (43.95 செக்.), ட்ரினிடாட் அண்ட் டுபாகோ வீரர் ஜெரீம் ரிச்சர்ட்ஸ் (44.33 செக்.) 2ஆவது அரை இறுதிப் போட்டியில் க்ரெனெடா வீரர் கிரானி ஜேம்ஸ் (43.78 செக்), ஸம்பியா வீரர் முஸாலாக சாமுகொங்கா (43.81 செக்.) ஆகியோர் முதலிரு இடங்களையும் கடைசி தகுதிகாண் போட்டியில் பெரிய பிரித்தானிய வீரர் மெத்யூ ஹட்சன் - ஸ்மித் (44.07 செக்.), அமெரிக்க வீரர் மைக்கல் நோர்மன் (44.26 செக்.) ஆகியோர் முதலிரு இடங்களையும் பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றனர்.
அவர்களுடன் ஒட்டுமொத்த நிலையில் அடுத்த அதிசிறந்த நேரப் பெறுதிகளைப் பதிவுசெய்த அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் பெய்லி (44.31 செக்.), நைஜீரிய வீரர் சாமுவேல் ஒகாஸி (44.41 செக்.) ஆகியோரும் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM