திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தத முதியவர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

ரகுமான்பேட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த 6 வயது சிறுமிக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்ட போது வைத்தியரிடம் சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்துச் சென்று பார்த்தபோது குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமை தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. அதன்பேரில் பொலிஸ் வழக்குப்பதிவு செய்து பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பேட்டையைச் சேர்ந்த சுடலையாண்டி (74) என்பவரை கைதுசெய்துள்ளனர்.