bestweb

ஜனாதிபதியின் செயல் எதிர்கால ஆட்சியாளர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமையும் - ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்

06 Aug, 2024 | 10:06 PM
image

(நா.தனுஜா)

ஒரு நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியைக் கட்டியெழுப்பவேண்டுமெனில், அந்நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கமுடியாது என ஜனாதிபதி கூறுவது எதிர்வருங்காலத்தில் ஆட்சிபீடம் ஏறவுள்ள ஆட்சியாளர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமையும் என எச்சரித்துள்ளார்.  

'இலங்கையின் தேர்தல் சூழ்நிலையில் ஊடகம் மற்றும் சட்டத்தின் வகிபாகம்' எனும் தலைப்பில் இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்துரை நிகழ்வு இன்று  செவ்வாய்கிழமை (06) கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்கத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் தவிசாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர் 'எவ்வாறு ஜனநாயகம் மரிக்கிறது?' என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூலில் உள்ள விடயங்கள் அமெரிக்காவுக்கு மாத்திரமன்றி, நம்மனைவருக்கும் பொருந்தக்கூடியவையாகும். பொதுவில் இராணுவ சதி மற்றும் புரட்சி போன்றவற்றின் விளைவாக ஜனநாயகம் மரிப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும், நவீன உலகத்தில் தேர்தல் ஊடாக ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட தலைவராலேயே ஜனநாயகத்தை வலுவிழக்கச்செய்யவும் முடியும். 

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இம்முறை நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஏனெனில் 'அரகலய' போராட்டத்தின் பின்னர் நாட்டுமக்கள் தேர்தலொன்றில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் முதன்முறையாக வழங்கப்படுவதனால், இது மிகமுக்கியமான தேர்தலாகும். 

ஒரு நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியைக் கட்டியெழுப்பவேண்டுமெனில், அந்நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும். குறிப்பாக பங்களாதேஷில் பிரதமராகப் பதவி வகித்த ஷெய்க் ஹஸினா ஜனநாயகக்கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்பட்டது. எனவே அவ்வாறான பின்னணியில் பொருளாதார வளர்ச்சி வேகம் எத்தகைய மட்டத்தில் காணப்பட்டாலும், மக்கள் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக நிச்சயமாகக் கிளர்ந்தெழுவர். 

அதேபோன்று எமது நாட்டில் தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்திருக்கிறது. இருப்பினும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கமுடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் கூறுகின்றனர். 

இவ்வாறு நாட்டின் நீதித்துறையைப் புறந்தள்ளுவது மிகப்பாரதூரமான விடயமாகும். இதனை நாம் ரணில் விக்ரமசிங்க, தினேஷ் குணவர்தன என நபர்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கவில்லை. மாறாக இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிப்பதானது, எதிர்வருங்காலங்களில் ஆட்சிபீடமேறும் ஜனாதிபதி நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளுவதாகக் கூறுவதற்கே வழிகோலும்.  

ஆகவே நீதிமன்றத்தின் சுயாதீனத்துவமும் மேன்மையும் பாதுகாக்கப்படும் அதேவேளை, நாட்டின் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் உறுதிசெய்யப்படவேண்டும். அத்தோடு இத்தகை நெருக்கடிநிலையில் ஊடகவியலாளர்கள் எவ்வித பக்கச்சார்புமின்றி சுயாதீனமாகவும், நேர்மையாகவும் தமது அறிக்கையிடல் பணிகளை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-11 06:21:00
news-image

க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள்...

2025-07-11 07:01:56
news-image

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு,...

2025-07-11 05:43:42
news-image

வரி குறைக்கப்பட்டமைக்கான நிபந்தனைகளை வெளியிடுங்கள் ஐ.தே.க.பொதுச்...

2025-07-11 05:41:05
news-image

இந்திய ஒப்பந்தம்: பொதுச் சுகாதாரத்தை பாதிக்கும்...

2025-07-11 05:38:39
news-image

அமெரிக்காவின் தீர்வை வரிக்கு அரசாங்கம் எவ்வாறு...

2025-07-11 05:35:23
news-image

தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு நாள்...

2025-07-11 05:32:38
news-image

ஜனாதிபதி, பிரதமர் பனிப்போரால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்;...

2025-07-11 05:17:30
news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07