12ஆம் திகதிக்கு பின் நாங்கள் சில தீர்மானங்களை எடுக்க தள்ளப்படுவோம் ; வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை!

06 Aug, 2024 | 10:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

சம்பள நிர்ணய சபை எதிர்வரும் 12ஆம் திகதி பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு இறுதித் தீர்மானம்மேற்கொள்ளாவிட்டால் அதன் பின்னர் எமக்கு சம்பள அதிகரிப்பு தேவையில்லை. அந்தளவுக்க நாங்கள் ஏன் கம்பனிகளுக்கு அடிபனிய வேண்டும். எனவே 12ஆம் திகதிக்கு பின்னர் நாங்கள் சில தீர்மானங்களை எடுப்பதற்கு தள்ளப்படுவோம் என வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற மாத்தறை நில்வலா கங்கையை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பு திட்டம் மூலமான சிக்கல் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

அரச அதிகாரிகளின் அசமந்தப்பாேக்கும் காழ்ப்புணர்ச்சியும் காரணமாக மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் மீள் குடியேற்றப்படாமல் இருந்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கு தங்களின் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதற்கும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

அதேபோன்று பெருந்தோட்ட மக்கள் சம்பள உயர்வை இலவுகாத்த கிளி போன்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சம்பள நிர்ணய சபை மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி கூட இருப்பதாக அழைப்பு வந்திருக்கிறது. 12ஆம் திகதிக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் முறையான தீர்மானத்துக்கு வராவிட்டால் மீண்டுமொரு தீர்மானத்துக்கு சம்பள நிர்ணய சபைக்கு செல்வது குறித்து தீர்மானிப்போம்.

மேலும் பெருந்தோட்ட கம்பனிகளின் நிர்வாகம் தொடர்பில் அவர்ளின் நடவடிக்கை தொடர்பி்ல் இந்த சபையில் பல தடவைகள் பல அரசாங்கங்களுக்கு தெரிவித்திருக்கிறேன். ஆனால் இப்போது பெருந்தோட்ட கம்பனிகள் அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன. இதன் மூலம் தோட்டக் கம்பனிகள் மலையக மக்களை எப்படி வழிநடத்தி இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

அதேபோன்று மலையக பகுதிகள் இன்னும் அபிவிருத்தி செய்யப்படாத நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் ஒரு பிரிவினர் மலையகத்தின் நுவரெலியா, பதுளை பகுதிகளை பார்வையிட வருவதாக எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இவ்வாறான நிலையில் அவர்களை எப்படி அந்த பிரதேசங்களை காட்டுவது? இது நாட்டுக்கு வெட்கம்.

 எனவே எதிர்வரும் 12ஆம் திகதி சம்பள நிர்ணய சபை எமது மக்களின் சம்பள உயர்வு தொடர்பில் எவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்போகிறது. இடைக்கால சம்பள அதிகரிப்பொன்றை மேற்கொள்ளுமா என எமக்கு தெரியாது. என்றாலும் நியாயமான தீர்மானம் ஒன்றை அரசாங்கம் எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சலன புத்திக்குப் பலியாகும் ஆபத்தை இளைஞர்கள்...

2024-09-09 01:54:30
news-image

நாட்டை சீரழிக்கும் நிபந்தனைகளை நாணய நிதியம்...

2024-09-09 01:50:34
news-image

மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக...

2024-09-08 23:00:58
news-image

தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட...

2024-09-08 21:09:55
news-image

மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும்...

2024-09-08 21:08:02
news-image

உண்ணி மூலம் மனிதர்களுக்கு பரவும் வைரஸ்;...

2024-09-08 20:57:49
news-image

தலிபான்களைப்போன்ற ஆட்சியை முன்னெடுக்கவே அனுரகுமார முயற்சிக்கிறார்...

2024-09-08 20:17:46
news-image

யாழில் எனது உரை குறித்த விமர்சனங்களிற்கு...

2024-09-08 19:35:18
news-image

தபால் மூல வாக்குகளின் அதிகூடிய நன்மை...

2024-09-08 19:15:41
news-image

தேர்தல் காலத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்டால்...

2024-09-08 21:08:28
news-image

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்...

2024-09-08 21:09:08
news-image

காணி, வீட்டுரிமையைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன்...

2024-09-08 18:59:12