எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர், தான் பிரதமராகப் பதவியேற்கவிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தரவு சரிபார்த்தலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், தான் பிரதமராகப் பதவியேற்கவிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருப்பதாக சமூகவலைத்தளங்களில் பதிவொன்று பகிரப்பட்டவருகின்றது.
”ரணில் ஜனாதிபதியானதன் பின்னர் நானே பிரதமர் - ரவி கருணாநாயக்க கூறுகிறார்” என்ற தலைப்புடன், சிங்கள தேசிய பத்திரிகை ஒன்றின் முதற்பக்கத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட பதிவு பகிரப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இப்பதிவின் உண்மைத்தன்மை குறித்து இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் Fact Seeker ஆராய்ந்து பார்த்ததில், அப்பதிவில் எவ்வித உண்மையும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து Fact Seeker க்கு தெளிவுபடுத்தியுள்ள ரவி கருணாநாயக்க, இத்தகைய கருத்துக்கள் எதனையும் தான் வெளியிடவில்லை எனவும், சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் பதிவு முற்றிலும் பொய்யான தகவல்களை உள்ளடக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM