(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
2019ஆம் ஆண்டு முதல் இவ்வரு டத்தின் கடந்த ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் 25,267.2 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுக் கொண்டுள்ளோம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் மிலான் ஜயதிலக எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் 7974 பேர் அலங்கார மீன் தொழில் மற்றும் அது சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கான அனைத்து சலுகைகள் ஊக்குவிப்புகளும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு 548.8 மெற்றிக் தொன் அலங்கார மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் 2908 .3 மில்லியன் ரூபா வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் 2020 ஆம் ஆண்டில் 2408.7 மில்லியன் ரூபா, 2021 ஆம் ஆண்டில் 4183.6 .மில்லியன் ரூபா ,2022 ஆம் ஆண்டில் 7135 .5 மில்லியன் ரூபா, 2023 ஆம் ஆண்டில் 8631.1 மில்லியன் ரூபா மற்றும் இந்த ஆண்டில் கடந்த ஆறு மாதங்களில் 3236. 2 மில்லியன் ரூபாவும் வருமானமாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM