மேற்குவங்கம் மாநிலத்தில் ஓடும் ரயில் செல்பி எடுக்க முயன்று தவறி விழுந்த 3 மாணவர்கள் பலியானது சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் சிலர் ஹவுரா ஹூக்ளி ரயிலில் பயணம் செய்துள்ளனர். பெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து லிலுவா ரயில் நிலையம் இடையே ரயில் சென்று கொண்டிருந்த மாணவர்கள் சிலர் ரயிலில் தொங்கியபடி செல்பி எடுக்க முயன்றுள்ளனர். 

எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவர்கள் மூன்று பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.