தவறான தீர்மானங்கள் மூலம் மீண்டும் நெருக்கடி நிலையே ஏற்படும் - அமைச்சர் ஜீவன்

Published By: Digital Desk 7

06 Aug, 2024 | 10:12 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னைய நிலைமையை பார்க்கும்போது அதிலிருந்து மீள முடியும் என எவரும் நம்பவில்லை. எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார். தவறான தீர்மானங்கள் மூலம் மீண்டும் நெருக்கடிகளே ஏற்படும் என்பதை  அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற மாத்தறை நில்வலா கங்கையை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பு திட்டம் மூலமான சிக்கல் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னைய நிலைமையை பார்க்கும்போது அதிலிருந்து மீள முடியும் என எவரும் நம்பவில்லை. எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார். தவறான தீர்மானங்கள் மூலம் மீண்டும் நெருக்கடிகளே ஏற்படும் என்பதை  அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் அதற்கு முன்பிருந்த பழைய நிலைக்கு வராவிட்டாலும் அதைவிட நல்லதொரு நிலைக்கு வர முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது 

உணர்வுகளுக்கு அடிபணியாமல் சிந்தித்து செயல்பட வேண்டும் அதனையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்துள்ளார்.

அன்றைய நிலை தொடர்பில் சிந்தித்து தற்போது நாம் எங்கு உள்ளோம் என்பதை  சிந்திக்க வேண்டும் . பிரச்சினைகளுக்கு தீர்வு மட்டுமல்ல ஸ்திரத்தன்மை இல்லாமையே அதற்கு காரணம்.

மேலும், பங்களாதேஷ் நிலைமைகள் தொடர்பில் உண்மையில் நாம் கவலையடைகிறோம்.அது தொடர்பில் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் கவனத்தில் எடுத்துள்ளனர். எனினும் அதனை இலங்கையோடு ஒப்பிட்டு தொடர்ந்தும் கருத்துக்களை முன் வைப்பது ஏன்? என நான் கேட்க விரும்புகின்றேன். அதேபோன்று எதிர்க்கட்சியினர் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படும் என்றா கூற வருகின்றனர்? நாம் நீதியை நிலைநாட்டவே பாடுபடுகின்றோம். 

தவறான தீர்மானங்கள் மூலமே நெருக்கடிகள் ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த இரண்டு வருடங்களோடு ஒப்பிடுகையில் அதன் பின்னரான முன்னேற்றம் மற்றும் நாம் எங்கே உள்ளோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

 நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு...

2024-09-16 17:50:20
news-image

அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான...

2024-09-16 17:27:06
news-image

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திய...

2024-09-16 17:42:59
news-image

பெந்தோட்டையில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு

2024-09-16 17:10:31
news-image

பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

2024-09-16 16:35:36
news-image

லொறி - கெப் வாகனம் மோதி...

2024-09-16 16:12:21
news-image

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும்...

2024-09-16 15:56:52
news-image

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர் கைது

2024-09-16 15:25:21
news-image

அடுத்த மாதம் புதிய இ-கடவுச்சீட்டு அறிமுகம்

2024-09-16 16:28:14
news-image

வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேசிய மக்கள் சக்தியின்...

2024-09-16 15:02:31
news-image

தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன் -...

2024-09-16 15:20:20
news-image

அதிவேக வீதியில் நிலத்தடி மின் கம்பிகளை...

2024-09-16 14:52:37