கொலன்னாவ, மீட்டொத்தமுல்லை பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்து விழந்ததில் அப்பிரதேசத்தில் இருந்த 100 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தால் காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை குப்பை மேட்டின் மேல் பகுதியில் தீப்பற்றி அதனுள் பெகோ இயந்திரம் ஒன்று சிக்கியுள்ளதுடன், விமானப்படையின் பெல் 212 வகை ஹெலிகெப்டர் தீயை அணைப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.