(எம்.ஆர்.எம்.வசீம் , இராஜதுரை ஹஷான்)
வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்து, அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்ற முயற்சிக்கிறது.
இரண்டு வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம் தற்போது தேர்தல் நெருங்கும்போது இதனை ஆரம்பித்திருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பிரதேச செயலாளர் பிரிவுகள் ஊடாக வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. ஆனால் நாட்டில் 50ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் இருக்கின்றனர்.
அவர்களுக்கு அரச துறையில் மற்றும் அரசாங்கம் அல்லாத தனியார் துறையில் தொழில் பெற்றுக்கொடுக்கும் முறையான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளுமாறு நாங்கள் அரசாங்கத்துக்கு ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வந்தோம்.
ஆனால் 50ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு என்ன, அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் என்ன? என்ற எமது கேள்விக்கு அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு முறையான பதில் கிடைக்கவில்லை. அதேநேரம் அவர்களுக்கு பயிற்சி நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றபோதும் எந்தவித பயிற்சி நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன்.
வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஒருசில வாரங்களுக்கு முன்னர்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கம் ஏன் இந்தளவு காலம் இதனை செய்யாமல் இருந்தது. செப்டம்பர் 21ஆம் திகதியை இலக்குவைத்தா தற்போது வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.? வேலையில்லாமல் 50ஆயிரம் பட்டதாரிகள் வீதியில் இருக்கின்றனர் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்றார்.
அதற்கு எதிர்கட்சித் தலைவர் தெரிவிக்கையில், எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு காண்போம். ஆனால் செப்டம்பர் 21ஆம் திகதி அண்மித்திருக்கும்போது ஏன் பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்கிறீர்கள். இந்த கண்கட்டி வேலையை செய்து யாரை ஏமாற்றுகிறீர்கள் என கேற்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM