நாட்டு மக்களின் கருத்துக்கு அமைய நாம் ஜனாதிபதியுடன் இணைந்தோம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

06 Aug, 2024 | 12:25 PM
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர்இ நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

கட்சியாக இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி எப்போதும் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (05) இரவு பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. 

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க , காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன, அலி சப்ரி மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். 

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக மாவட்ட மட்டத்தில் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. 

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியதாவது, 

கேள்வி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி பிளவுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

பதில் - ஜனாதிபதி எம்மைப் ஒதுக்கவோ அல்லது பிரிக்கவோ ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்பதை நான் மிகுந்த பொறுப்புடன் கூறுகின்றேன். நாட்டு மக்களின் அபிப்பிராயத்தின்படி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குமாறு அவர்கள் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்தார்கள். கட்சியாக இணைந்து பணியாற்றுமாறு அவர் எப்போதும் கூறுவார். நடனம் ஆட முடியாதவர்களை பூமி இழுக்கும் என்பது போல் சாக்குப்போக்கு சொல்பவர்களின் கருத்தே ஒழிய இது எங்களின் கருத்து அல்ல.

கேள்வி - கட்சிக்கு ஏன்  ஒரே கருத்துக்கு வர முடியவில்லை?

பதில் - இந்த மொட்டு கட்சி மக்களின் வியர்வையால் கட்டியெழுப்பப்பட்ட கட்சி. இது பணக்காரர்களுக்கு  வாடகைக்குஇ குத்தகைக்கு அல்லது விற்பதற்கு ஏற்ற கட்சி அல்ல. 2022 இல் ஜனாதிபதி நல்லவராக இருந்தால்இ அவர் தனது பொறுப்பை நிறைவேற்றியிருந்தால்இ அவர் ஏன் இன்று மோசமாக இருக்கிறார்?

கேள்வி - இந்த கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது?

பதில் - ஜனாதிபதியின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடினோம். மேலும்இ இதுவரை முடிவெடுக்காதவர்கள் இன்று எம்முடன் பேசினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41