தனித்துவம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டு வீரகேசரி - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வாழ்த்து

Published By: Vishnu

06 Aug, 2024 | 09:32 AM
image

ஒரு பத்திரிகை நூற்றாண்டை நோக்கி பயணிப்பது என்பது அந்த பத்திரிகையின் தனித்துவம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை எடுத்துக் காட்டுகின்றது.நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பத்திரிகையாகவும், அப்பத்திரிகை விருட்சத்தின் விழுதுகளான இணையத்தளம், நவீன டிஜிட்டல் தளங்களின் வாயிலாக நேரடி சமூகத் தொடர்பாடல் வசதிகளோடு தமிழ் மக்களை நெருக்கியுள்ள ஓர் இலத்திரனியல் ஊடகமாகவும் இன்று வீரகேசரி பரிணமித்திருக்கின்றது என வீரகேசரியின் ஆண்டு விழாவை முன்னிட்டு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வீரகேரியின் 94 ஆவது அகவையை முன்னிட்டு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படுவது ஊடகமாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் சுப்பிரமணிய செட்டியாரால் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வீரகேசரி பத்திரிகையானது, ஆரம்ப காலங்களில் இந்திய வம்சாவளி மக்களுக்கான உரிமைக்குரலாக திகழ்ந்ததுடன், பின்னர் இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி தமிழ் பேசும் மக்களின் உரிமைக் குரலாக செயற்பட்டு வருகின்றது. இலங்கை தமிழ் அச்சு ஊடக வரலாற்றில் வீரகேசரி பத்திரிகையின் வரவும் இருப்பும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இலங்கையின் முதற்தர தேசிய தமிழ்ப் பத்திரிகை எனும் உயரிய அடையாளம் பெறும் வீரகேசரி “தரமான வழியில் தெளிவான தகவல்” என்ற மகுட வாசகத்தை தாங்கியவாறு நூற்றாண்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. தனித்துவமான பாதையில் செய்திகளை வழங்கிவரும் வீரகேசரி இன்று 94 ஆவது அகவையை கொண்டாடுவதையிட்டு வீரகேசரிப் பத்திரிகைக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் பெருமையடைகின்றேன்.

ஒரு பத்திரிகை நூற்றாண்டை நோக்கி பயணிப்பது என்பது அந்த பத்திரிகையின் தனித்துவம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை எடுத்துக் காட்டுகின்றது. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பத்திரிகையாகவும், அப்பத்திரிகை விருட்சத்தின் விழுதுகளான இணையத்தளம், நவீன டிஜிட்டல் தளங்களின் வாயிலாக நேரடி சமூகத் தொடர்பாடல் வசதிகளோடு தமிழ் மக்களை நெருக்கியுள்ள ஓர் இலத்திரனியல் ஊடகமாகவும் இன்று வீரகேசரி பரிணமித்திருக்கின்றது.

குறித்த ஒரு வாசகர் வட்டத்தை மையப்படுத்தாமல் முதியவர்கள், பெண்கள், இளம் சமூகத்தினர், சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் மையப்படுத்தி, கல்விசார் விடயங்கள், பொழுதுபோக்கு, மருத்துவம், சினிமா என அத்தனை துறைகளையும் மையப்படுத்தி இன்று இலங்கை முழுவதுமுள்ள தமிழ் பேசும் மக்களை வீரகேசரி தன்வசப்படுத்தியுள்ளது என்று சொல்வதில் மிகையாகாது.

ஊடக அறநெறியுடன் ஊடக ஒழுக்கவியலை பின்பற்றி பயணிக்கும் வீரகேசரியின் பணியானது, இலங்கையர் என்ற அடையாளத்தை வடிவமைப்பதிலும் தேச நலனிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நேர்மையான பங்களிப்பை வழங்கி வருகின்றது.

எனவே, நூற்றாண்டை நோக்கிய வீரகேசரியின் வெற்றிப் பயணம் சிறப்புடன் அமைய வாழ்த்துவதுடன் வீரகேசரியின் தனினிகரற்ற சேவை தமிழ் பேசும் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்.

“ தமிழா தமிழா ஒன்றுபடு, தமிழால் தமிழால் ஒன்றுபடு, வீர கேசரி ஆற்றல் கொண்டு தூர திசைகளை வென்றுவிடு ” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனுப்பி வைத்துள்ள வாழ்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29