இந்து சமுத்திரத்தில் இணையற்ற அழகுடனே
எல்லா வளமும் கொண்ட இலங்கை எனும் இத் தீவில்
ஒன்பது தசாப்தங்கள் ஒவ்வொன்றாய் தாண்டிய பின்
நாளைய சரித்திரத்தை செய்தியாய் இன்று தந்து
தடை தாண்டி நடைபோதும் நல்ல தமிழ் நாளிதலே
எம் வீரகேசரியே
உள்நாட்டு நிகழ்வுகளும் உலகத்து செய்திகளும்
உள்ளது உள்ளபடி ஊரெல்லாம் அறிந்திடவே
உண்மையை உரக்கச் சொல்லும்
ஒப்பில்லா நாளிதலாய் வீர நடை போடும்
எம் வீரகேசரியே
முத்தான தமிழ் நடையில் சத்தான கருத்துக்களை
நித்தமும் எடுத்துரைக்கும் தனித்துவத்தால் தலை நிமிர்ந்து
சத்தமாய் செய்திகளை சாதி, மத பேதமின்றி
தேடுவோர் தமக்களிக்கும் தேன் தமிழ் நாளிதலே
எம் வீரகேரியே
ஆரம்ப காலம் தொட்டு அனைவரும் ஏற்கும் வகை
மாற்றங்கள் பல கொண்டு பன்முக படி ஏடாக
வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு திசை வாழும் தமிழ் மக்கள்
தினந்தோறும் எதிர்பார்க்கும் தினசரியே
எம் வீரகேசரியே
திங்கள் தொடங்கி தினந்தோறும் எல்லோருக்கும்
ஏற்ற ஒரு பதிப்பாகி ஞாயிறு வந்தவுடன்
நல்ல புது வடிவெடுத்து
ஆடவர், பெண்கள், பெரியோர்க்கும் சிறுவருக்கும்
விருந்தாக செய்தி, கதைகள், கட்டுரைகள்
கருத்துகள் ஏந்தி வரும் எழில் மிக்க ஏடே
எம் வீரகேசரியே
இந்நாட்டு தமிழ் மக்கள் எதிர்பார்த்து படிக்கும் ஏடு
ஏழு கடல் தாண்டி வாழும் இனிய தமிழ் உறவுகளும்
அன்னை மண் செய்தி தேடி அலைகின்ற தேவை நீக்கி
அனுதினமும் அவர் வாழும் இல்லம் நோக்கி
செந்தமிழ் செய்திகளை நித்தமும் தரும் நாளேடே
எம் வீரகேரியே
கொடு நோய்கள் குவலயத்தை
குடை சாய்க்க வந்தபோதும்
வரலாறு காணாத வறுமை வந்து
நம் நாட்டை மிரட்டியே நின்றபோதும்
தடை மீறி நடை போட்டு தசாப்தம் பல கடந்து
தனித் தமிழ் நாளின் ஏடே
எம் வீரகேரியே
ஒரு நூறு ஆண்டு அல்ல பலநூறு ஆண்டுகாலம்
பழம் பெருமை குன்றாமல் இமயம் புால் நீ உயர்ந்து
பல பல வடிவெடுத்து பாரெல்லாம் புகழ் பரப்பி
இனிய தமிழ் வாசகரை என்றென்றுமு் மகிழ்விப்பாய்
எம் வீரகேரியே
தொண்ணூற்று நான்காண்டை துணிவோடு பின்தள்ளி
நூற்றாண்டு நுாக்கி வீறு நடை போடும் எம் வீரகேசரியே
நூறாண்டையும் கடந்து கபல்லாண்டு வாழ்ந்து
பாரெல்லாம் தமிழொளி பரப்பும் ஏடாய்
என்றும் நீ நின்று வாழ்க
எம் வீரகேசரியே !
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM