வேட்புமனு தாக்கலின் பின் வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

Published By: Vishnu

05 Aug, 2024 | 11:23 PM
image

(எம்.மனோசித்ரா)
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினதும்  முன்னாள் ஜனாதிபதிகளினதும் பிரத்தியேக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்கவும் அத்தகைய சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கும்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கும் பரிந்துரைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா பிராந்தியத்தில் பட்லர் நகரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் அந்தந்த வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் பிரதானி, பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (தேர்தல்கள்) ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா :...

2025-03-19 12:56:38
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; கட்டுப்பணம்...

2025-03-19 12:48:22
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32