(இராஜதுரை ஹஷான்)
விண்ணப்பங்களை அஞ்சலி டும் போது ஏற்படும் தாமதம்,ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டு தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலவகாசம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (9) வரை நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது நேற்று (திங்கட்கிழமை) நிறைவடையவிருந்த நிலையில் விண்ணப்பங்களை அஞ்சலிடும் போது ஏற்படும் தாமதம் மற்றும் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டு விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் திகதி எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியன்று அதாவது எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்கள் பொறுப்பான மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களை வந்தடைய வேண்டும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் போது ஏற்படக்கூடிய தாமதங்களை தவிர்க்கும் வகையில் நாளை மறுதினம் (8),மற்றும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (9) ஆகிய தினங்களில் பூரணப்படுத்திய தபால்மூல வாக்கு விண்ணப்பங்களை அஞ்சலுக்கு ஒப்படைப்பதை தவிர்த்து
ஒவ்வொரு மாவட்ட ரீதியாக அவற்றை வேறாக பிரித்து, வௌ;வேறு உறைகளில் இட்டு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தில் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு நேரில் சென்று ஒப்படைப்பது மிகவும் உகந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM