தமிழ் சினிமாவில் பட மாளிகை, டிஜிட்டல் தளம், தொலைக்காட்சி ஆகிய அனைத்து வித திரை சந்தைகளிலும் வணிக மதிப்பு கொண்ட நட்சத்திர நடிகர் அருள்நிதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'டிமான்டி காலனி 2' படத்தின் ஓடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டிமான்டி காலனி 2' எனும் திரைப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பாபி பாலச்சந்திரன்- விஜய் சுப்பிரமணியன்- ஆர் சி ராஜ்குமார்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இம்மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் ஓடியோவும், தீம் மியூசிக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கிறது. சாம் சி. எஸ். இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. பாடல்கள் அனைத்தும் ரசிக்க கூடிய வகையிலும், வித்தியாசமானதாகவும் ஹாரர் திரில்லர் ஜேனரை உணர வைப்பதாகவும் இருப்பதால் இசை ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM