நடிகை சாந்தினி தமிழரசன் நடிப்பில், இந்தியாவில் முதன்முறையாக சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜேனரிலான 'அமீகோ' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. .
அறிமுக இயக்குநர் பி. பிரவீண் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அமீகோ' எனும் திரைப்படத்தில் சாந்தினி தமிழரசன், அர்ஜுன் சோமையாஜுலா, சுவிதா ராஜேந்திரன், பிரவீன் இளங்கோ, வத்சன் சக்கரவர்த்தி, வெக்கே, மனிஷா ஜஷ்னானி, பிரக்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரேவா இசையமைத்திருக்கிறார். சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரத்யாக்ரா மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. கிரிஜா தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. அத்துடன் இப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த எதிர்வரும் 23 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே தமிழில் வெளியான ‘இரும்புத் திரை’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ போன்ற சைபர் கிரைம் திரில்லர் வகைமையிலான படங்களுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்தது என்பதும், அதேபோன்றதொரு வகைமையிலான இந்த படத்தில் ஹாரர் எனும் அம்சம் கூடுதலாக இணைக்கப்பட்டிருப்பதால் கூடுதலான வரவேற்பு கிடைக்கக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM