விஜய் நடிக்கும் 'கோட்- GOAT' திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு

Published By: Digital Desk 7

05 Aug, 2024 | 08:27 PM
image

தமிழ் சினிமாவில் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் விஜய் கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் 'கோட் - GOAT' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஸ்பார்க்..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட் - GOAT' திரைப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌

சித்தார்த்த நூனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம்- கல்பாத்தி எஸ். கணேஷ் - கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

செப்டம்பர் 5 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'அவ கண்ணால பார்த்தா..' என தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்தப் பாடலை பாடலாசிரியர் கங்கை அமரன் எழுத, இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான யுவன் சங்கர் ராஜா மற்றும் பின்னணி பாடகி விருஷா பாலு ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

துள்ளலான தாள லயம் +மெல்லிசை பாடலுக்குரிய மெட்டு + இளைய தலைமுறையினரை கவரும் பாடல் வரிகள்+ டி ஏஜிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விஜயின் தோற்றம் + யுவனின் வசீகரமான குரல் + ஆகிய கலவையுடன் உருவான இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.

மேலும், இந்தப் படத்தில் வெளியான இரண்டு பாடல்களை விட இந்த பாடலில் யுவனின் மேஜிக் அற்புதமாக அமைந்திருப்பதால் இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இதனிடையே இந்தப் பாடலில் விஜயின் இளமையான தோற்றம் குறித்து இணையத்தில் ரசிகர்கள் எதிர்மறையான பின்னூட்டங்களை பதிவிட்டு வருகிறார்கள் என்பதும், விஜயின் ரசிகர்கள் இதற்கு சரியான பதிலடியை பதிவிட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயன்தாரா - சுந்தர். சி கூட்டணியில்...

2024-09-17 15:35:04
news-image

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய்...

2024-09-17 15:20:48
news-image

சத்யராஜ் நடிக்கும் 'ஜீப்ரா' படத்தின் மோஷன்...

2024-09-17 15:20:18
news-image

பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும்...

2024-09-17 13:59:28
news-image

ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி வரும் விஜய்

2024-09-17 13:35:40
news-image

அரசியலில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு குட்டிக்கதை...

2024-09-17 11:12:46
news-image

'கார்த்தி 29' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

2024-09-17 10:55:46
news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08