'தி வாரியர்' எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் திரைப்படத்தில் ராம், சஞ்சய் தத், காவியா தாப்பர், பாணி, ஆலி, கெட்டப் சீனு, ஷாயாஜி ஷிண்டே, 'டெம்பர்' வம்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சாம் கே. நாயுடு மற்றும் கியானி ஜியானெல்லி ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கிறார்.
முழு நீள ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் காதல் + நகைச்சுவை + சென்டிமென்ட் + எக்சன்+ பிரம்மாண்டம்+ என பொழுதுபோக்கு அம்சங்களின் கலவைகளுடன் காட்சிகள் இருப்பதாலும் அவை விறுவிறுப்பாக இருப்பதாலும், படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM