இறை ஆற்றலை வணங்கும் முறை

05 Aug, 2024 | 04:51 PM
image

ரபரப்பான இந்த வாழ்க்கையில் நாம் ஆலயங்களுக்கு செல்லும்போது அங்கு தனி சன்னதியுடன் வீற்றிருக்கும் தெய்வங்களை சில வினாடிகளில் வணங்கி விட்டு, கடந்து சென்று விடுகிறோம்.‌ ஆலய வளாகத்தில் இருக்கும் பிரகாரங்களுக்கு செல்வதையும் தவிர்க்கவே விரும்புகிறோம். வேறு சிலர் வாகனங்களில் பயணிக்கும் போது புகழ்பெற்ற ஆலயத்தை கடக்கும் போதோ அல்லது சக்தி மிகுந்த ஆலயத்தை கடக்கும் போதோ ஒரே வினாடிக்குள் பிரார்த்தித்து கடந்து சென்று விடுகிறோம். வேறு சிலர் பொழுதுபோக்கிற்காக அல்லது சாகச பயணத்திற்காக ஒதுக்கும் நேரத்தைக் கூட... ஆலய வளாகத்தில் செறிவுடன் பரவி உள்ள இறை அருளை பெறுவதற்காக செலவழிப்பதில்லை. மேலும் சிலர் ஆலயத்திற்குள் சென்றவுடன் நேரடியாக மூலவர் ஸ்தானத்தை வணங்கி விட்டு, கால தாமதம் காரணமாக விரைந்து ஆலயத்தை விட்டு சென்று விடுவர்.  இவர்கள் எல்லாம் நாளாந்தம் இறைவனை வழிபட்டாலும்.... இறைவனின் அருளும், ஆசியும் கிடைப்பதில்லை. எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இறை ஆற்றல் மிகுந்த தெய்வங்களை வணங்குவதற்கும் ஒரு வரிசை முறையை வரையறுத்து அதனை முன்மொழிந்திருக்கிறார்கள். அதனை பின்பற்றி இறைவனை வணங்கினால் தான் அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும்.

ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்டாலும் அல்லது வீட்டிற்குள்ளேயே இறைவனை வழிபட தொடங்கினாலும் முதலில் விநாயகப் பெருமானை வணங்கிட வேண்டும். முழு முதற் கடவுளான விநாயகர் பெருமானை வணங்கிய பிறகு தான் மற்ற தெய்வங்களை வணங்கிட வேண்டும். நீங்கள் வீட்டில் பூஜையறை அமைத்து வணங்குபவர்களாக இருந்தாலும்.. முதலில் விநாயகப் பெருமானுக்கு வணக்கம் சொல்லி, அவருடைய மந்திரத்தை உச்சரித்து வணங்கிய பின் தான் வேறு தெய்வங்களை வணங்கிட வேண்டும்.

இதனைத் தொடர்ந்து உங்களது குடும்பம் அல்லது பரம்பரையில் இளம் வயதிலேயே குறிப்பாக திருமணம் ஆவதற்கு முன்னாலே அகால மரணம் அடைந்த பிள்ளைகள்.. கன்னி தெய்வங்கள் என குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களது புகைப்படம் இருந்தால் அதனை உங்களது பூஜை அறையில் பிரத்யேகமான இடத்தில் வைத்து மனம் உருக அவரது பெயரை உச்சரித்து ஆசி வழங்க வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.‌

கன்னி தெய்வத்தை, தெய்வமாகிவிட்ட கன்னிகளை வணங்கிய பிறகு, அதாவது குடும்பத்திற்கு தெய்வமாக இருக்கும் இவர்களை வணங்கிய பிறகு குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் எந்த நில எல்லையில் வாழ்ந்து வருகிறீர்களோ.. அதனை காவல் காத்து வரும் கிராம தெய்வங்களை வழிபட வேண்டும்.‌ எம்மில் சிலர் இடப்பெயர்வு காரணமாக பல்வேறு புதிய இடங்களுக்கு சென்றிருக்க கூடும். அங்கு உள்ள மூத்தவர்களிடம் .. இந்த எல்லையை காவல் காத்து வரும் கிராம தெய்வம் எது? என கேட்டு, அறிந்து அதனை வழிபட வேண்டும் அல்லது நீங்கள் உங்களுடைய பூர்வீக இடத்தை காவல் காத்து வரும் கிராம தெய்வத்தை மனதில் நிறுத்தி வணங்கிட வேண்டும்.

இதனைத் தொடர்ந்து தற்போது நீங்கள் வசித்து வரும் எல்லையில் அதாவது பூர்வீக இடத்திலிருந்து புலம் பெயர்ந்து தற்போது பணி நிமித்தம் காரணமாகவோ அல்லது வாழ்வாதாரம் காரணமாகவோ வசித்து வரும் இடத்தில் உள்ள எல்லையை காத்து வரும் தெய்வத்தை வழிபட வேண்டும்.

இவை அனைத்தையும் முறையாகவும் , மனமுருகவும் வழிபட்ட பிறகு உங்களுடைய இஷ்ட தெய்வத்தை வணங்கிட வேண்டும். உங்களுடைய இஷ்ட தெய்வம் என்பது சிவன்- பெருமாள்- முருகன்- அம்மன்-  போன்றோர்களை வணங்கிட வேண்டும்.

இந்த வரிசையில் நீங்கள் இறைவனையும், இறை ஆற்றலையும் வணங்கும் போது... இவர்களின் பரிபூரணமான ஆசியும், அருளும் கிடைக்க பெற்று, உங்களது கோரிக்கை விரைவில் நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம். 

இறைவனை வணங்குவதற்காக குறிப்பிடப்பட்டுள்ள சடங்கு, சம்பிரதாயங்களையும்... இறை வழிபாட்டிற்காக வரையறுத்து குறிப்பிடப்பட்டுள்ள வரிசை முறையையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.  இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை நுட்பமாக உணர்ந்து உங்களின் பிரார்த்தனையை  தொடர வேண்டும்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

2024-09-04 18:11:19
news-image

செல்வ வரவை மேம்படுத்தும் எளிய பரிகாரங்கள்...!?

2024-09-03 15:08:38
news-image

ராகு தோஷ பரிகாரங்கள்..!?

2024-09-02 20:26:56
news-image

செல்வ வளம் குவிய மேற்கொள்ள வேண்டிய...

2024-08-31 18:51:29
news-image

2024 செப்டம்பர் மாத ராசி பலன்கள் 

2024-08-31 12:34:23
news-image

மாணவர்களின் கல்விப் புலமை மேம்படுத்துவதற்கான எளிய...

2024-08-30 15:49:59
news-image

நினைத்ததை நடத்திக் காட்டும் கையெழுத்து பரிகாரம்...!?

2024-08-28 17:12:21
news-image

தனம் சேருவதற்கான எளிய வழிமுறைகள்...! பரிகாரங்கள்..!?

2024-08-27 17:41:54
news-image

பண வரவு எம்முடைய வீட்டில் நிரந்தரமாக...

2024-08-26 17:26:34
news-image

குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைப்பதற்கான எளிய...

2024-08-24 15:55:33
news-image

வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து விடுபட சித்தர்கள் வழங்கிய...

2024-08-23 20:09:49
news-image

சகல கர்மா தோஷங்களையும் நீக்கும் எளிய...

2024-08-21 17:45:17