புதுமுக நடிகர் தீரன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'சாலா' எனும் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் எஸ். டி. மணி பால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சாலா' எனும் திரைப்படத்தில் தீரன், ரேஷ்மா வெங்கடேஷ், சார்லஸ் வினோத், ஸ்ரீ நாத், அருள்தாஸ், சம்பத் ராம், யோகி ராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீஸன் இசையமைத்திருக்கிறார். மதுபான கூட பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி ஜி விஸ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார்.
இம்மாதம் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் வடசென்னை பகுதியில் அமையப் பெற்றிருக்கும் மது அருந்தும் கூடம் தொடர்பான பின்னணியையும், அதன் அரசியலையும் காட்சிப்படுத்தி இருப்பதாலும்... மறுபுறம் மது பான விற்பனை நிலையத்தையும், மது அருந்தும் கூடத்தையும் அகற்ற வேண்டும் என போராடும் ஆசிரியையின் போராட்டத்தை காட்சிப்படுத்தி இருப்பதாலும்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM