வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் 15 கிலோ எடையுடைய வாகன தகர்பு வெடிபொருள் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா உக்கிளாங்குளம் 04 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடென்றில் குறித்த வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

புதுவருடத்தினை முன்னிட்டு வீடு மற்றும் வீட்டின் வளவினை துப்பரவு செய்யும் போது மண்னில் புதையுண்ட நிலையில் குறித்த 15 கிலோ நிறையுள்ள வெடிபொருள் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து வீட்டின் உரிமையாளர் பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வெடிபொருளை பார்வையிட்டதுடன், இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

நீதிமன்ற அனுமதியினை பெற்று விசேட அதிரடி படையினரின் உதவியுடன் வெடிபொருளை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த வெடிபொருளில் கப்டன் பவான் (ஐயா) தகர்ப்பு வெடிமருந்தென பொறிக்கப்பட்டுள்ளதுடன், இது விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகின்றது.