(இராஜதுரை ஹஷான்)
அரசியல் கட்சிகளை பிளவுபடுத்துவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்தவர். ஜனாதிபதிக்கும், எமக்கும் ,இடையில் எவ்வித டீல் அரசியலும் கிடையாது. கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காகவே சிறந்த தீர்மானத்தை எடுத்தோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ,இடையில் திங்கட்கிழமை (05) பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் , இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கட்சியின் நிறைவேற்றுக் குழு ஏகமனதாக எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஆதரவு வழங்கி விட்டு மக்கள் மத்தியில் பொய்யான விமர்சிப்பது பயனற்றது.
பொதுஜன பெரமுனவை விட்டு சென்றுள்ளவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 'சலூன் கதவு' திறந்துள்ளது என்று குறிப்பிடுவார்.ஆகவே விலகிச் செல்பவர்களை பலவந்தமாக தடுத்து வைக்க முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளை பிளவுபடுத்துவதில் திறமையானவர்.கொள்கைகளை முன்னிலைப்படுத்தி கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காமல்,தனிப்பட்ட முறையில் கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கட்சிகளை பிளவுபடுத்துவது ஜனாதிபதியின் செயற்பாடாகும்.
ஜனாதிபதிக்கும்,எமக்கும் ,டையில் எவ்வித டீல் அரசியலும் கிடையாது.கட்சியின் கொள்கைக்கு அமைய நாங்கள் தீர்மானம் எடுத்தோம்.கட்சியின் உறுப்பினரல்லாத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது சாத்தியமற்றது. எமது ஜனாதிபதி வேட்பாளரை நாளை அறிவிப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM