கல்வி உரிமைக்காக செயலாற்றுகின்ற அரசாங்கத்தை நிறுவவேண்டும் - அருட்சகோதரி கிறேட்டா நாவலபெத்த

05 Aug, 2024 | 01:13 PM
image

கல்வி என்பது விற்பனை செய்யக்கூடிய ஒரு பண்டமல்ல. நாமனைவரும் ஒன்றுசேர்ந்து அந்த கல்வி உரிமைக்காக செயலாற்றுகின்ற  அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள வேண்டும் என செவிப்புலன் குறைபாடுள்ள சிறுவர்கள் கல்வி நிலையத்தின் பணிப்பாளர் அருட்சகோதரி கிறேட்டா நாவலபெத்த தெரிவித்தார்.  

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த 03 ஆம் திகதி சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகள்  பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே செவிப்புலன் குறைபாடுள்ள சிறுவர்கள் கல்வி நிலையத்தின் பணிப்பாளர் அருட்சகோதரி கிறேட்டா நாவலபெத்த இவ்வாறு தெரிவித்தார்.   

அவர மேலும் தெரிவிக்கையில்,  

செவிப்புலனற்றோர் என்பது முழுமையாகவே செவிமடுக்க இயலாதவர்களல்ல. தற்போதுள்ள தொழில்நுட்பத்துடன் இந்த நிலைமைக்கு நன்றாகவே பரிகாரம் காணமுடியும். 

செவிப்புலனற்றவர்களால் இந்த உலகில் சாதிக்கமுடியாதது ஒன்றுமே கிடையாது.  மருத்துவர்களாக,  இசை இயக்குனராக ஆற்றல்படைத்தவர்கள் அவர்கள் மத்தியில் இருக்கிறார்கள்.   

மென்செஸ்டர் யுனிவேர்சிட்டியில் எனக்கு இசை கற்பித்தவர் முற்றாகவே செவிப்புலனற்ற ஆசானாவார். அவர்கள் பேச எத்தனிக்கின்ற தருணத்திலேயே  அவர்களை இனங்கண்டு கல்வி புகட்டுவதற்கான மனித உரிமையை பெற்றுக்கொடுக்கவேண்டும்.   

இதுவரை ஆரம்பப் பாடசாலையொன்றினை ஆரம்பிக்க, அதைப்போலவே வேறு அவசியப்பாடுகளை நிறைவுசெய்ய எந்தவொரு அமைச்சரும் முறையான வேலைத்திட்டமொன்றை வகுக்கவில்லை. நாங்கள் பட்ட வேதனைகள் போதும். இந்த நிலைமையை மாற்றியமைத்திட வேண்டும்.  

கல்வி என்பது விற்பனை செய்யக்கூடிய ஒரு பண்டமல்ல. நாமனைவரும் ஒன்றுசேர்ந்து அந்த கல்வி உரிமைக்காக செயலாற்றுகின்ற  அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி...

2025-06-13 09:58:33
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-06-13 09:53:02
news-image

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ...

2025-06-13 09:32:06
news-image

இன்றைய வானிலை 

2025-06-13 06:11:23
news-image

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று;...

2025-06-13 05:16:32
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-06-13 05:14:37
news-image

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க...

2025-06-13 05:13:08
news-image

லொக்கு பெட்டி பயன்படுத்திய 2 துப்பாக்கிகள்...

2025-06-13 05:08:14
news-image

கொழும்பு மேயராக சிறந்தவரை பெயரிட்டால் ஆதரவளிப்போம்...

2025-06-13 05:02:20
news-image

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; தேசபந்து தென்னக்கோன்,...

2025-06-13 04:59:33
news-image

ஜனாதிபதியின் செயலாளர், நீதிமைச்சின் செயலாளரை விசாரிக்க...

2025-06-13 02:36:19
news-image

மின்சாரக்கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும்...

2025-06-13 02:31:39