பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகவேண்டும் என வலியுறுத்தும் நோக்குடன் தலைநகர் டாக்காவை நோக்கி பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற வன்முறைகளில் 100க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ள நிலையிலேயே மாணவர்கள் தலைநகரை நோக்கி பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
அரசாங்கம் பல மாணவர்களை கொலை செய்துவிட்டது இறுதிவிடைக்கான தருணம் வந்துவிட்டது என ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர் அசிவ்மஹ்மூட் முகநூல் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
அனைவரும் டாக்காவில் அணிதிரள்வோம் குறிப்பாக டாக்காவை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வருவோம்,என தெரிவித்துள்ள அவர் டாக்காவிற்கு வாருங்கள் வீதிகளில் நிலையெடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறைகளில் 91 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மிகப்பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர் என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
தலைநகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவகவசவாகனத்தில் பங்களாதேஸ் கொடியை ஏந்தியவாறு செல்வதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதத்தை போல நேற்று படையினரும் பொலிஸாரும ஆர்ப்பாட்டக்காரர்களை தடுப்பதற்கு முன்வரவில்லை என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
நேற்யை வன்முறைகளின் போது 15க்கும் மேற்பட்ட பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் ஒத்துழையாமை போராட்டத்தினை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
சிராஜ்கஞ் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பொலிஸ்நிலையமொன்றை தாக்கியவேளை மூன்று பொலிஸார் கொல்லப்பட்டனர்.
வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு குறித்து ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான பரந்துபட்ட போராட்டங்களாக மாறியுள்ளன.
சில பகுதிகளில் அரசாங்க ஆதரவாளர்களிற்கும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காராகளிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
முழு நகரமும் மோதல்களமாக மாறியுள்ளது ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மருத்துவமனையொன்றிற்கு வெளியே வாகனங்களிற்கு தீ மூட்டியுள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM