இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக எம்மாலும் ஒரு பங்கினை ஆற்ற முடியும். அமெரிக்காவில் செவிப்புலன் பாதிக்கப்பட்ட ஒரு யுவதியான ஜுலியா விண்வெளி வீராங்கனையாவதற்கான பயிற்சியை பெற்று வருகிறார். எம்மாலும் அப்படிச்செய்ய முடியும் என செவிப்புலனற்ற சமுதாயத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற இலக்கியப்படைப்பாளி தக்ஷிலா விக்கிரமாரச்சி தெரிவித்தார்.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த 03ஆம் திகதி சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே செவிப்புலனற்ற சமுதாயத்தை பிரதிநிதித்துவம்செய்கின்ற இலக்கியப்படைப்பாளி தக்ஷிலா விக்கிரமாரச்சி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீங்கள் அனைவரும் பெருந்தொகையான மனிதர்களுடனேயே இங்கு குழுமி இருக்கிறீர்கள். நாம் எவருமே தாழ்ந்த மனிதர்களல்ல. எமது இதயங்கள் ஒரே சத்தத்தின்படியே துடிக்கின்றன.
எனினும் நாங்கள் இந்த நாட்டின் சுயாதீனத்தன்மையை இழந்த மனிதர்களாவோம். மற்றவர்களின் பொருளாதார, அரசியல், கலாச்சார தேவைகளுக்காக வெறுமனே பாவிக்கப்பட்ட மனிதர்களாவோம்.
எமக்காக நாங்கள் முன்வந்தால் இயலாமை நிலையை விற்றுப்பிழைக்க தயாராகி வருகிறோம் என குற்றம் சுமத்துகிறார்கள். எனது கடமை வாழ்க்கையில் இதுவரை எமக்கு எந்தவோர் அரசாங்கமும் வசதிகளை வழங்கவில்லை.
எனது கடமை வாழ்க்கையை சார்ந்ததாக பொதுவாக கேட்க வேண்டியது அவற்றை விளங்கிக்கொள்ளுங்கள், அதிகமாக அன்பு செலுத்துங்கள் என்றுதான்.
இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக எம்மாலும் ஒரு பங்கினை ஆற்றமுடியும். அமெரிக்காவில் செவிப்புலன் பாதிக்கப்பட்ட ஒரு யுவதியான ஜுலியா விண்வெளி வீராங்கனையாவதற்கான பயிற்சியை பெற்று வருகிறார். எம்மாலும் அப்படிச்செய்ய முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM