30 பெண்களுக்கு சுயதொழிலுக்கான நிதி உதவி வழங்கியது “விழித்தெழு  பெண்ணே” கனடா அமைப்பு

05 Aug, 2024 | 11:19 AM
image

“விழித்தெழு  பெண்ணே” கனடா அமைப்பினால் “காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்” எனும் கருத்திட்டத்துக்கு அமைய 30 பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு, அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புகள் நேற்றைய தினம் (04) ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கான பொருளாதார ரீதியான தீர்வுகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் பெண் தலைமைத்துவ  சிறு வியாபாரங்களை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளில் “விழித்தெழு  பெண்ணே” கனடா அமைப்பினால் Thondaman Professional Training Centre - Hattonஇல் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மலையக பகுதிகளில் “விழித்தெழு  பெண்ணே” கனடா அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது செயற்றிட்டம் என்பதுடன் இச்செயற்றிட்டத்தின் அடைவு மட்டங்களை கவனமாக பகுப்பாய்வு செய்து எதிர்கால மலையக பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளுக்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அமைப்பின்  நிர்வாக குழு தீர்மானித்துள்ளது. 

நேற்றைய நிகழ்வில் அமைப்பின்  நிறுவுனர் சசிகலா நரேந்திரா நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக கலந்துகொண்டு உரையாற்றினார். 

இதன்போது அவர், இச்செயற்றிட்டத்தை முன்கொண்டு செல்வதில்  துணைபுரிந்த “விழித்தெழு பெண்ணே” கனடா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி DR. நரேந்திராவுக்கும்  நேற்றைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்த அர்ஜுன் ஜெயராஜ் மற்றும் இந்நிகழ்வுக்கான செயற்றிட்ட அதிகாரி  கனிஷ்டா மைக்கலுக்கும் நன்றி தெரிவித்ததோடு, “விழித்தெழு  பெண்ணே” கனடா அமைப்பின் சேவைகள் மலையகமெங்கும் எதிர்காலத்தில் விஸ்தரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா ஸ்ரீ மதுர கணபதி கோவிலில்...

2024-09-07 13:37:25
news-image

பர்ஹான் முஸ்தபாவின் "மரக்கல மீகாமன்" நூல்...

2024-09-07 13:32:14
news-image

பிலியந்தலை விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள்...

2024-09-07 14:19:14
news-image

"எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவெட் லிமிட்டெட்...

2024-09-05 18:08:24
news-image

யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில்...

2024-09-04 18:02:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

2024-09-04 17:37:08
news-image

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவம் ...

2024-09-04 17:27:35
news-image

அகஸ்டினா அபிக்கா டியானாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-09-05 17:10:53
news-image

நல்லூர் கொடியிறக்கம்!

2024-09-03 12:28:17
news-image

யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கொடியேற்றம்

2024-09-02 18:56:34
news-image

புதிய அலை கலை வட்டத்தின் தொடர்...

2024-09-02 18:41:27
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 39...

2024-09-02 17:32:39