ஒலிம்பிக் வரலாற்றில் 400 மீற்றர் அரை இறுதிக்கு முன்னேறிய முதலாவது இலங்கையர் அருண தர்ஷன

Published By: Vishnu

05 Aug, 2024 | 12:28 AM
image

(நெவில் அன்தனி)

பிரான்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிமை (04) நடைபெற்ற ஒலிம்பிக் 2024 விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான ஆண்களுக்கான 400 மீற்றர் அரை இறுதிப் போட்டியில் பங்குபற்ற அருண தர்ஷன தகுதிபெற்றார்.

இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதலாவது வீரர் என்ற சாதனையை அருண தர்ஷன படைத்தார்.

400 மீற்றர் தகுதிகாண் சுற்றின் 5ஆவது போட்டியில் பங்கேற்ற அருண தர்ஷன அப் போட்டியை 44.99 செக்கன்களில் ஓடி முடித்து 3ஆம் இடத்தைப் பெற்று அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

இது அவரது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாகும்.

அப் போட்டியில் க்ரெனெடா வீரர் கிரானி ஜேம்ஸ் (44.78 செக்.) முதலாம் இடத்தையும் கனடா வீரர் கிறிஸ்டோபர் மொரேல்ஸ் வில்லியம்ஸ் (44.96 செக்.) இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

அமெரிக்கர்களான மைக்கல் நோர்மன் (44.10 செக்.), குவின்சி ஹோல் (44.28 செக்.) ஆகிய இருவரும் தத்தமது தகுதிகாண் போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்றனர்.

தகுதிகாண் சுற்றில் 6 போட்டிகள் நடத்தப்பட்டதுடன் மொத்தம் 44 வீரர்கள் பங்குபற்றினர்.  அரை இறுதிக்கு தகுதிபெற்ற 18 வீரர்களில் இணை 14ஆவது இடத்தை  அருண தர்ஷன  பெற்றார்.

எவ்வாறாயினும் இரண்டாம் வாய்ப்பில் பங்குபற்றவுள்ள 3 வீரர்கள் அருண தர்ஷனவைவிட சிறந்த நேரப் பெறுதிகளைப் பதிவுசெய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-16 13:57:56
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56