வெண்டசேயின் 6 விக்கெட் குவியலின் உதவியுடன் இந்தியாவை 32 ஓட்டங்களால் வென்றது இலங்கை; தொடரிலும் முன்னிலை

Published By: Vishnu

04 Aug, 2024 | 10:25 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 32 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.

ஜெவ்றி வெண்டசே மிகத் துல்லியமாக பந்துவீச்சி 6 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெந்து இந்தியாவை திணறச் செய்தார்.

இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதலாவது போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தபோதிலும் அவிஷ்க பேர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் சிறிய இடைவெளியில் அடுத்துடுத்து ஆட்டம் இழந்தனர்.

அவிஷ்க பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரம (14), ஜனித் லியனகே (12), சரித் அசலன்க (25) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

எனினும் துனித் வெல்லாலகே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 39 ஓட்டங்களைப் பெற்றதுடன் கமிந்து மெண்டிஸுடன் 7ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டார்.

கமிந்து மெண்டிஸ் 40  ஓட்டங்களையும் அக்கில தனஞ்சய 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

241 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 42.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஷுப்மான் கில்லுடன் ஆரம்ப விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 64 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவர் 5 பவுண்டறிகளையும் 4 சிக்ஸ்களையும் விளாசினார்.

18ஆவது ஓவர் ஆரம்பமானபோது இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆனால், அடுத்த 5 விக்கெட்கள் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்ததால் இந்தியா பெரும் தடுமாற்றம் அடைந்தது.

இந்தியாவின் முதல் 6 விக்கெட்களையும் ஜெவ்றி வெண்டசே வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

ஷுப்மான் கில் (35), ஷிவம் டுபே (0), விராத் கோஹ்லி (14), ஷ்ரேயாஸ் ஐயர் (7), கே.எல். ராகுல் (0) ஆகியோரே 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விக்கெட்களை இழந்தவர்களாவர்.

இந் நிலையில் அக்சார் பட்டேலும் வொஷிங்டன் சுந்தரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைப் பெற்ற வண்ணம் இருந்தனர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடியவாறு இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டிருந்த அக்சார் பட்டேல் (44),  வொஷிங்டன்  சுந்தர் (15) ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெளியேறினர். (190 - 8 விக்.)

கடைநிலை ஆட்டக்காரர்கள் இருவரும் சொற்ப நேரத்தில் ஆட்டம் இழந்தனர்.

பந்துவீச்சில் ஜெவ்றி வெண்டசே 10 ஓவர்களில் 33 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் சரித் அசலன்க 6.2 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஜெவ்றி வெண்டசே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19
news-image

சாத்தியமான நான்கு உலகக் கிண்ண இறுதிப்...

2026-07-14 20:47:02
news-image

லங்கா பிறீமியர் லீக் 2026 போட்டிகளை...

2026-07-14 13:40:15
news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10
news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37