பங்களாதேசில் அரசாங்க எதிர்ப்பு ஆதரவாளர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற மோதல்களில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் ஒத்துழையாமை போராட்டத்தினை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
சிராஜ்கஞ் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பொலிஸ்நிலையமொன்றை தாக்கியவேளை மூன்று பொலிஸார் கொல்லப்பட்டனர்.
வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு குறித்து ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான பரந்துபட்ட போராட்டங்களாக மாறியுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு கண்ணீர்புகை பிரயோகம் தடியடி போன்றவற்றை பயன்படுத்தியுள்ள பொலிஸார் இரவுநேர ஊரடங்கினை அறிவித்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
பங்களாதேசின் பலபகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் டாக்காவின் பிரதான சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குழுமியுள்ளனர்.
சில பகுதிகளில் அரசாங்க ஆதரவாளர்களிற்கும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காராகளிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
முழு நகரமும் மோதல்களமாக மாறியுள்ளது ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மருத்துவமனையொன்றிற்கு வெளியே வாகனங்களிற்கு தீ மூட்டியுள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM