தலவில புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வருடாந்த ஆடி மாத திருவிழாவினை முன்னிட்டு இன்று (04) திருப்பலியை தொடர்ந்து புனித அன்னம்மாளின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.
தேவாலயத்தில் கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி, தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக இன்று சிலாபம் மறை மாவட்ட ஆயர் விமல்சிரி ஜயசூரிய ஆண்டகை மற்றும் இரத்தினபுரி மறை மாவட்ட ஆயர் அண்டன் வயமன்க்ரூஸ் ஆண்டகை ஆகியோர் திருப்பலியை கூட்டாக ஒப்புகொடுத்தனர்.
திருப்பலியை தொடர்ந்து புனித அன்னம்மாளின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
பலத்த பொலிஸ், இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் பக்தர்கள் பல மாவட்டங்களிலும் இருந்து வருகைதந்து 263வது வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM