மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

Published By: Digital Desk 7

04 Aug, 2024 | 06:17 PM
image

இராமபிரானால் வழிபட்ட பெருமை கொண்ட மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (04) நண்பகல் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை (02) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்பு பெற்ற இந்த ஆலயத்தின் இரத பவனி நேற்று (03) நடைபெற்றது.

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவ கிரியைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்துக்கு விசேட பூஜைகளை தொடர்ந்து திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள், சுவாமி வீதியுலா நடைபெற்றது.

அதனையடுத்து, வெளிவீதியில் எருது வாகனத்தில் தீர்த்தக்கரையில் எழுந்தருளி அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, பிரமகர்த்தி தோஷம் நீங்கப்பெற்ற ஆலயம் என்ற சிறப்பினை கொண்ட ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தந்தையை இழந்தவர்கள் தர்ப்பணம் விட்டு பிதிர்க்கடன் செலுத்தினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா ஸ்ரீ மதுர கணபதி கோவிலில்...

2024-09-07 13:37:25
news-image

பர்ஹான் முஸ்தபாவின் "மரக்கல மீகாமன்" நூல்...

2024-09-07 13:32:14
news-image

பிலியந்தலை விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள்...

2024-09-07 14:19:14
news-image

"எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவெட் லிமிட்டெட்...

2024-09-05 18:08:24
news-image

யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில்...

2024-09-04 18:02:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

2024-09-04 17:37:08
news-image

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவம் ...

2024-09-04 17:27:35
news-image

அகஸ்டினா அபிக்கா டியானாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-09-05 17:10:53
news-image

நல்லூர் கொடியிறக்கம்!

2024-09-03 12:28:17
news-image

யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கொடியேற்றம்

2024-09-02 18:56:34
news-image

புதிய அலை கலை வட்டத்தின் தொடர்...

2024-09-02 18:41:27
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 39...

2024-09-02 17:32:39