நண்பன் ஒருவன் வந்த பிறகு - விமர்சனம்

04 Aug, 2024 | 05:24 PM
image

நண்பன் ஒருவன் வந்த பிறகு - விமர்சனம்

தயாரிப்பு : வைட் ஃவெதர் ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : ஆனந்த், பவானி ஸ்ரீ, வெங்கட் பிரபு, ஆர் ஜே விஜய், இளங்கோ குமரவேல், கே பி வை பாலா, ஆர் ஜே ஆனந்தி, கொலபுளி லீலா, மதன் கௌரி மற்றும் பலர்.

இயக்கம் : ஆனந்த்

மதிப்பீடு :  2 / 5

'மீசைய முறுக்கு' எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான ஆனந்த் - கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'. பிரபல இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு வழங்கும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த இளங்கோ குமரவேலின் மூத்த மகனான ஆனந்த் தன் நண்பர்களுடன் இனிமையாக பொழுதை கழிக்கிறார். 'ஏ' லெவல் முடித்ததும், உயர்கல்வி கற்பதற்காக விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் எனும் பட்டப்படிப்பை படிப்பதற்கு விரும்புகிறார். ஆனால் அவரின் தந்தையோ பொறியியல் பட்டதாரியானால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று வலியுறுத்துகிறார். தந்தையின் விருப்பத்திற்காக பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்.

அங்கு ஒரு நண்பர்கள் குழு உருவாகிறது. இவர்கள் அனைவரும் இணைந்து 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' எனும் பெயரில்  நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தை தொடங்கவும், அதில் 'Become A Star' எனும் பெயரின் புதிய நிகழ்ச்சி நிரலை அறிமுகப்படுத்தவும் விரும்புகிறார்கள். அதற்கான அவர்களுடைய முதற்கட்ட முயற்சி தோல்வி அடைகிறது. அத்துடன் நண்பர்களுக்குள் பிரிவும் ஏற்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கதையின் நாயகனான ஆனந்த்-  நண்பர்களை விட்டு பிரிந்து, வெளிநாட்டிற்கு சென்று சம்பாதித்து, மீண்டும் தன் தாயகத்துக்கு திரும்பி, நண்பர்களை சந்தித்து தங்களின் இலட்சியத்தை எட்ட தீர்மானிக்கிறார்.  அது வெற்றியை அளித்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

நண்பர்களுக்கு இடையேயான கதை என்பதால் காதல்- பிரேக் அப் -மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் - பார்ட்டி-  என இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பும் அனைத்து விடயங்களும் திரைக்கதையில் தவறாமல் இடம் பிடித்திருக்கிறது. ஆனாலும் முழுமையாக ரசிக்க முடியவில்லை.  பெரும்பாலான காட்சிகளின் பின்னணியில் ஏதேனும் ஒரு பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பதால் எரிச்சல் உண்டாகிறது. பின்னணி இசையிலும் பல இடங்களில் ஒரே மாதிரியான தாள லயங்கள் இடம் பெறுவதால் கூடுதல் எரிச்சலை உண்டாக்குகிறது.

திரைக்கதையின் பயணத்தை பக்கத்து இருக்கை பார்வையாளர் முதல் நாள் முதல் காட்சியிலேயே விவரித்துக் கொண்டே இருப்பதால் சுவாரசியம் மிஸ்ஸிங்.

பிரபல யூடியூபர்கள் மதன் கௌரி உள்ளிட்ட பலர் நடித்திருப்பதால் டிஜிட்டல் தள ரசிகர்களிடம் வரவேற்பை பெறக்கூடும். 

கதையின் நாயகனுக்கு 'மேடை பயம்' உள்ளது என்றொரு விடயத்தை இடம்பெற வைத்திருக்கிறார்கள். அதை வைத்து சுவாரசியமான உச்சகட்ட காட்சியை அமைத்திருக்கிறார்கள். ஆனால் அதையும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் இருப்பதால்... !!!

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த்- அழகான காந்த விழியை கொண்டிருந்தாலும்... அவருடைய உதட்டு பகுதி.. மைனஸாக இருக்கிறது. அனைத்துக் காட்சியிலும் மிகையான நடிப்பை வழங்கி, தான் திறமையான நடிகர் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.  இருந்தாலும் மிடில் கிளாஸ் பையன் என்ற தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் பவானி ஸ்ரீ  - அறிமுக காட்சியிலேயே பாவாடை தாவணியில் தோன்றி, தன்  இளமையையும், கவர்ச்சியையும் விருந்தாக படைப்பதால் இளம் தலைமுறை ரசிகர்களின் மனதில் 'பசக்க்' என ஒட்டிக் கொள்கிறார்.

நட்பை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்திற்கு தேவையான ஒளிப்பதிவையும், இசையையும் வழங்கி தங்களின் பங்களிப்பை ரசிகர்களின் மனதிற்குள் கடத்துகிறார்கள் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும்.

நண்பன் ஒருவன் வந்த பிறகு -  நட்புக்காக நட்புகளுடன் ஒரு முறை பார்க்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08
news-image

இயக்குநர் ராஜு முருகனுடன் இணையும் கௌதம்...

2024-09-14 10:53:20
news-image

சீனு ராமசாமியின் 'கோழி பண்ணை செல்லத்துரை'...

2024-09-14 06:46:07
news-image

பாடகர் மனோவின் இரு மகன்களை கைதுசெய்ய...

2024-09-13 12:10:15
news-image

போரின் கொடுமைகளை அழுத்தமாக விவரிக்கும் ஹிப்...

2024-09-12 16:44:48
news-image

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் சசிகுமாரின் 'நந்தன்'...

2024-09-12 16:50:19
news-image

மீண்டும் வடிவேலு - சுந்தர் சி...

2024-09-12 16:10:07
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின்...

2024-09-12 13:35:36