(நெவில் அன்தனி)
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் போட்டியில் ஓவல் இன்வின்சிப்ள் அணிக்காக விளையாடவிருப்பதால் அயர்லாந்துக்கு எதிரான மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் சமரி அத்தபத்து விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையில் 2 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 11, 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
ஆனால், தி ஹண்ட்ரட் கடைசி லீக் போட்டி ஆகஸ்ட் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தி ஹண்ட்ரட் லீக் போட்டி முடிவடைந்ததும் அயர்லாந்துடனான மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வழமைபோல் இலங்கை அணியின் தலைவியாக சமரி அத்தபத்து விளையாடுவார்.
அயர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2022 - 2025 சுழற்சிக்கான ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் (மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண்) தொடராகவும் அமைகிறது.
சமரி அத்தபத்துவுக்குப் பதிலாக மகளிர் ரி20 தொடரில் பெரும்பாலும் ஹசித்தா சமரவிக்ரம அணித் தலைவியாக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, சமரி அத்தபத்துவுக்குப் பதிலாக இலங்கை மகளிர் ரி20 குழாத்தில் கௌஷினி நுத்யாங்கனா இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை குழாம்
சமரி அத்தப்பத்து (தலைவி - சர்வதேச ஒருநாள் போட்டி), ஹர்ஷித்தா சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, ஹாசினி பெரேரா, காவிஷா டில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, சுகந்திகா குமாரி, உதேஷிகா ப்ரபோதனி, அச்சினி குலசூரியா, இனோஷி ப்ரியதர்ஷனி, காவ்யா காவிந்தி, சச்சினி நிசன்சலா, ஷ ஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா, கௌஷினி நுத்யாங்கனா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM