நாட்டின் முன்னிலையில் அளப்பரிய பொறுப்பு எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது ; இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க!

04 Aug, 2024 | 08:57 PM
image

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய மாநாடு என இதனைக் குறிப்பிட்டாலும்  இது அனைத்து ஆசிரியர்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற பாரிய மாநாடாகும். ஆட்சியாளர்கள் முன்னிலையில் மண்டியிடாமல்,  ஆட்சியாளர் முன்னிலையில் இடைநிலை சமாதானங்களின்றி, ஆட்சியாளர்கள் கொடுப்பதை எடுத்துக்கொண்டு மௌனிகளாக இருப்பதற்குப் பதிலாக சவால்களை விடுத்து கடந்தகாலம் பூராவிலும் எங்கள் நோக்கங்களை நெருங்கியிருக்கிறோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்  பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். 

மாளிகாவத்தை  P.D. சிறிசேன மைதானத்தில் கடந்த 02ம் திகதி  இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய ஆசிரியர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்  பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க  இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஆசிரியரை எங்குதான் துன்பத்திற்கு இலக்காக்கவில்லை? ஒட்டுமொத்த மக்களைப்போன்றே ஆசிரியர்களயும் துன்பத்தில் ஆழ்த்துவதற்கு எதிராக ஒரே கூட்டத்தில்சேர்ந்து கடந்தகாலம் பூராவிலும் போராட்டங்களில் ஈடுபட்டோம். இந்த ஒற்றுமையை சிதைக்க நிகழ்கால அரசாங்கமும் எதிர்க்கட்சியும் பல்வேறு சதிவேலைகளை செய்தன.  

அந்த சதிவேலைகள் அனைத்துமே தோல்விகண்டுள்ளதென்பதை இந்த மாபெரும் தேசிய மாநாடு உறுதிசெய்துள்ளது.  இந்த மைதானம் அதிபர்களாலும் ஆசிரியர்களாலும் நிரம்பி வழிவதன் மூலமாக அந்த வெற்றிபற்றிய செய்தியே பறைசாற்றப்படுகின்றது. அனைத்துவிதமான துன்பங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கான சரியான வழியைக் காட்டவே இந்த மாநாடு நடாத்தப்படுகின்றது. 

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய மாநாடு என இதனைக் குறிப்பிட்டாலும்  இது அனைத்து ஆசிரியர்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற பாரிய மாநாடாகும். ஆட்சியாளர்கள் முன்னிலையில் மண்டியிடாமல்இ ஆட்சியாளர் முன்னிலையில் இடைநிலை சமாதானங்களின்றிஇ ஆட்சியாளர்கள் கொடுப்பதை எடுத்துக்கொண்டு மௌனிகளாக இருப்பதற்குப் பதிலாக சவால்களை விடுத்து கடந்தகாலம் பூராவிலும் எங்கள் நோக்கங்களை நெருங்கியிருக்கிறோம்.  

வரலாற்றுக்காலம் பூராவிலும்  தொழில்சார் போராட்டங்களை மேற்கொண்டாலும் எம்மனைவருக்கும் பாரிய செயற்பொறுப்பு  கையளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மாத்திரம் போராட்டங்களை மட்டுப்படுத்த உலகின் போசாக்கின்மையில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ள பிள்ளைகள் இருக்கின்ற ஒரு நாட்டைச்சேர்ந்த எமக்கு உரிமையில்லை.  

எல்லாவிதத்திலும் சீர்குலைக்கப்பட்டுள்ள  ஒரு நாட்டில் கல்வியை மாத்திரம் வேறுபடுத்தி எடுக்கமுடியாது. நாட்டை ஒட்டுமொத்தமாக கட்டியெழுப்புவதில் ஒரு பங்கு கல்விக்கு இருக்கிறது. பாடசாலை மட்டத்தில் பாடசாலை சபைகளை கட்டியெழுப்பி மறுமலர்ச்சி யுகத்திற்கு தொடக்கத்தை பெற்றுக்கொடுக்கின்ற செப்டெம்பர் 21 ஆந் திகதிய வெற்றிக்காக நாமனைவரும் எம்மை அர்ப்பணிப்போம். எமது நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் படையணி  நியாயமான சம்பளத்தைக்கோரி வீதிகளில் போராடிய  யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து கௌரவமான ஆசிரியர் சேவையை உறுதிசெய்துகொள்வதற்காக அனைவரும் அணிதிரள்வோம். என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க...

2024-09-16 17:55:58
news-image

 நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு...

2024-09-16 17:50:20
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2024-09-16 17:59:05
news-image

அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான...

2024-09-16 17:27:06
news-image

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல்...

2024-09-16 18:02:25
news-image

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திய...

2024-09-16 17:42:59
news-image

வேட்பாளர் கையேட்டை பெற மறுத்த இளைஞன்...

2024-09-16 18:06:37
news-image

பெந்தோட்டையில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு

2024-09-16 17:10:31
news-image

பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

2024-09-16 16:35:36
news-image

லொறி - கெப் வாகனம் மோதி...

2024-09-16 16:12:21
news-image

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும்...

2024-09-16 15:56:52
news-image

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர் கைது

2024-09-16 15:25:21