40 வீதமான பிள்ளைகள் பாடசாலை செல்லமுடியாத நிலையில் இருக்கின்றனர் ; இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் விஷாகா அபேரத்ன!

04 Aug, 2024 | 08:57 PM
image

இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கின்ற குடும்பங்களில் எந்தப் பிள்ளைக்கு கல்வி புகட்டுவது எனும் கேள்வி எழுகின்றது. பாடசாலை செல்லவேண்டிய வயதில் உள்ள பிள்ளைகளில் 40% பாடசாலை செல்லமுடியாத நிலையில் இருக்கிறார்கள். பிறரிடம் உடைகளை வாங்கி அணிகின்ற 20%  இருக்கிறார்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் விஷாகா அபேரத்ன தெரிவித்தார்.  

மாளிகாவத்தை  P.D. சிறிசேன மைதானத்தில் கடந்த 02ம் திகதி  இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய ஆசிரியர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் விஷாகா அபேரத்ன இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

இன்றைய சமூகம் எந்த நிலையில் இருக்கின்றதென்பது பற்றிய ஒரு பொதுவான புரிந்துணர்வு எமக்கு இருக்கின்றது.  ஆசிரியத்தொழிலில் அதிகமாக இருக்கின்றவர்கள் அன்புக்குரிய ஆசிரியைகளே. அவர்கள் இந்த நாட்டில் வசிக்கின்ற தாய்மார்கள் ஆவர். ஆசிரியர் என்றவகையிலும் தாய்மார் என்றவகையிலும் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினையை நாங்கள் அதிகமாக உணர்கிறோம்.  

நாங்கள் அந்த பிரச்சினை தொடர்பில் அதிகமான கூருணர்வு கொண்டிருக்கிறோம். சமையலறையில் அடுப்பில் மூட்டப்படுகின்ற நெருப்பினைவிட இதயத்தில் அதிகமான நெருப்பு எரிகின்ற தென்பதை நாங்கள் அறிவோம்.  வகுப்பறையில் வேதனைகளை வெளிப்படுத்திக்கொள்ளக்கூட முடியாமல் இருக்கின்ற  பிள்ளைகளை நாங்கள் காண்கிறோம். சமூகவலைத்தளங்களில் இந்த பிள்ளைகளின் உணவு வேளைகள் பற்றிய தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார்கள்.   

இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கின்ற குடும்பங்களில் எந்தப் பிள்ளைக்கு கல்வி புகட்டுவது எனும் கேள்வி எழுகின்றது. பாடசாலை செல்லவேண்டிய வயதில் உள்ள பிள்ளைகளில் 40%  பாடசாலை செல்லமுடியாத நிலையில் இருக்கிறார்கள். பிறரிடம் உடைகளை வாங்கி அணிகின்ற 20% இருக்கிறார்கள். 

கொழும்பில் மாத்திரமல்ல தொலைதூரப் பிரதேசங்களில்கூட இந்த துன்பப்படுகின்ற ஆசிரியைகள் தமது பிள்ளைக்கு தாயாக அமைவதைவிட பாடசாலையில் அந்த பிள்ளைகளுக்கு தாயாக அமைகிறார்கள். எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியழுப்ப வேண்டுமென்ற ஏகோபித்த எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பினை சுமந்துகொண்டு இங்கு வந்து புதிய மறுமலர்ச்சிக்காக மேலும் ஊக்கத்துடன் செயற்படுவோமென  கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை...

2024-09-16 18:20:25
news-image

நானுஓயாவில் சொகுசு கார் விபத்து :...

2024-09-16 18:27:30
news-image

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க...

2024-09-16 17:55:58
news-image

 நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு...

2024-09-16 17:50:20
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2024-09-16 17:59:05
news-image

அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான...

2024-09-16 17:27:06
news-image

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல்...

2024-09-16 18:02:25
news-image

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திய...

2024-09-16 17:42:59
news-image

வேட்பாளர் கையேட்டை பெற மறுத்த இளைஞன்...

2024-09-16 18:06:37
news-image

பெந்தோட்டையில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு

2024-09-16 17:10:31
news-image

பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

2024-09-16 16:35:36
news-image

லொறி - கெப் வாகனம் மோதி...

2024-09-16 16:12:21