ஜீ.எஸ்.பி. மே மாதம் இலங்கைக்கு கிடைக்கும் அரசாங்கம் நம்பிக்கை

Published By: Raam

13 Apr, 2017 | 02:41 PM
image

மனித உரி­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களில் கடந்த அர­சாங்­கத்தின் பொறுப்­பற்ற செயற்­பாட்டின் கார­ண­மாக இழக்­கப்­பட்ட ஜீ.எஸ்.பிளஸ்  வரிச் சலுகை   மீண்டும் இலங்­கைக்கு  மே மாதம்     கிடைக்கும் என்று  அர­சாங்கம் நம்­பிக்கை வெளி­யிட்­டுள்­ளது. 

 ஜீ.எஸ்.பி. வரிச் சலு­கையை  மீண்டும் இலங்­கைக்கு வழங்­கு­வது தொடர்பில் மதிப்­பீடு செய்­வ­தற்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உயர் மட்ட தொழில்­நுட்ப மதிப்­பீட்டுக்குழு இலங்கை வந்­துள்­ளது. 

இந்த குழு­வி­னரால் இலங்கை தொடர்பில் தயா­ரிக்­கப்­படும் தொழில்­நுட்ப அறிக்கை எதிர்­வரும் புதன்கிழமை பெல்­ஜியம் - பிரசெல்ஸ் நகரில் இடம்­பெற உள்ள ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் விஷேட கூட்டத்தொடரில் சமர்ப்­பிக்­கப்­பட உள்­ளது. 

இலங்­கையின் தற்­போ­தைய பொரு­ளா­தார ஸ்திரத்­தன்மை, மனித உரி­மைகள் மற்றும் தொழி­லா­ளர்­களின் உரிமை உள்­ளிட்ட விவ­கா­ரங்கள் தொடர்பில் அர­சாங்கம் வழங்­கி­யுள்ள முன்­னேற்ற அறிக்­கையை மதிப்­பீடு செய்­வது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உயர்மட்ட தொழில்­நுட்ப மதிப்­பீட்டுக் குழுவின் பணி­யாக உள்­ளது. 

எவ்­வா­றா­யினும் எதிர்­வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை இடம்­பெற உள்ள ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் விஷேட கூட்டத் தொடரில் மதிப்­பீட்டு குழுவின் அறிக்கை சாத­க­மான தன்­மை­களை வெளிப்­ப­டுத்­தினால் மே மாதத்தில் இருந்து ஜீ.எஸ்.பி 

வரிச்சலு­கை  மீண்டும் இலங்­கைக்கு  கிடைக்கும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் விஷேட கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை குழு திங்கட்கிழமை பெல்ஜியம் செல்ல வுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-15 06:15:52
news-image

துப்பாக்கிச் சூடு நடந்ததாக பரவிய தகவல்...

2026-09-15 06:13:56
news-image

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு...

2026-09-15 06:09:07
news-image

உயர்தர பாடத்தொகுதியில் சட்டம், சமூக நல்லிணக்கம் ...

2026-09-15 06:02:52
news-image

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட...

2026-09-15 06:00:26
news-image

தித்வா அனர்த்த நட்டஈட்டு வேலைத்திட்டம் வெற்றிகரமாக...

2026-09-15 05:57:44
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச...

2026-09-15 05:47:55
news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48