ஆசிரியர் சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் சம்பந்தமாக கடந்த காலத்தில் நாங்கள் பல போராட்டங்களை நடாத்தினோம். தேர்தல் எனும் போராட்டக் களத்திற்கு இதற்கு முன்னர் இந்த பெயரளவிலான பிரபுக்கள் எம்மை வரவிடவில்லை. ஒருசில இடதுசாரி சக்திகளுக்கு சிறிய சிலவற்றைக் கொடுத்து அடக்கியாண்டார்கள். அடக்கமுடியாமல்போன தலைவர்களை படுகொலை செய்தார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர், தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கே. டீ. லால்காந்த தெரிவித்தார்.
மாளிகாவத்தை P.D. சிறிசேன மைதானத்தில் கடந்த 02ம் திகதி இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய ஆசிரியர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர், தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கே. டீ. லால்காந்த இவ்வாறு தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டின் ஆசிரியர்கள்தான் கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புகின்ற போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்கள். கோட்டாபயவின் ஆட்சிக்கு எதிராக ஆசிரியர்கள், அதிபர்கள் போராட்டத்தை ஆரம்பித்ததாக அரசியல் விமர்சகர்கள் கடந்த காலத்தில் எழுதியிருந்தார்கள். அதைப்போலவே 76 வருடகால மூர்க்கத்தனமான ஆட்சிக்கு முற்றுப்பள்ளி வைக்கின்ற முதன்மைச் செயற்பொறுப்பினை ஆற்றுவதும் ஆசிரியர்களே என்பதை நாங்கள் நம்புகிறோம்.
இன்று இந்த மாநாட்டுக்கு வந்து நீங்கள் இந்த நாட்டின் பல அரசியல்வாதிகளை பயமுறுத்தி இருக்கிறீர்கள். முதன்முதலில் பயந்தவர் சஜித் பிரேமதாச. அடுத்ததாக ரணிலை பயமுறுத்தினீர்கள். இன்று பிற்போக்கான சக்திகள் அனைத்துமே பயந்துள்ளன. முற்போக்கான சக்திகள் அனைத்துமே மகிழ்ச்சியடைந்துள்ளன. செப்டெம்பர் 21 வெற்றியை நீங்கள் உறுதிசெய்திருக்கிறீர்கள். இதுவரை காலமும் வெற்றிபெற்றிராத முற்போக்காளர்களினதும் பாதிக்கப்படவர்களினதும் வெற்றியை இந்த ஆசிரியர் மாநாடே உறுதிசெய்துள்ளது என்பது திண்ணம்.
ஆசிரியர் சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் சம்பந்தமாக கடந்த காலத்தில் நாங்கள் பல போராட்டங்களை நடாத்தினோம். தேர்தல் எனும் போராட்டக் களத்திற்கு இதற்கு முன்னர் இந்த பெயரளவிலான பிரபுக்கள் எம்மை வரவிடவில்லை. ஒருசில இடதுசாரி சக்திகளுக்கு சிறிய சிலவற்றைக் கொடுத்து அடக்கியாண்டார்கள். அடக்கமுடியாமல்போன தலைவர்களை படுகொலை செய்தார்கள்.
இலங்கையில் முதல்த்தடவையாக தேர்தல் போராட்டக் களத்திற்கு பாதிக்கப்பட்ட மற்றும் முற்போக்கான சக்திகளுடன் 'திசைகாட்டி' ஒன்றுசேர்ந்து போராட்டக் களத்தின் கொடியை உயர்த்திப்பிடித்து வெற்றிகீதம் இசைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில்தான் இன்று இந்த மாநாடு நடைபெறுகின்றது.
தேர்தல் போராட்டக் களத்திற்காக தமது ஊரில் இருக்கின்ற அமைப்புகளுடன் தொடர்புபட்டு வாக்குப்பெட்டியை திசைகாட்டிக்கு புள்ளடியிட்ட மூன்றிலிரண்டு பங்கு வாக்குகளால் நிரப்புங்கள். அந்த தேர்தல் களத்தில் பெருவெற்றிபெற்று "மறுமலர்ச்சி யுகத்திற்கு" அத்திவாரத்தை அமைத்துக்கொடுக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியர் என்றவகையிலும் தாய்மார் என்றவகையிலும் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினையை நாங்கள் அதிகமாக உணர்கிறோம். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் விஷாகா அபேரத்ன இன்றைய சமூகம் எந்த நிலையில் இருக்கின்றதென்பது பற்றிய ஒரு பொதுவான புரிந்துணர்வு எமக்கு இருக்கின்றது. ஆசிரியத்தொழிலில் அதிகமாக இருக்கின்றவர்கள் அன்புக்குரிய ஆசிரியைகளே. அவர்கள் இந்த நாட்டில் வசிக்கின்ற தாய்மார்கள் ஆவர்.
நாங்கள் அந்த பிரச்சினை தொடர்பில் அதிகமான கூருணர்வு கொண்டிருக்கிறோம். சமையலறையில் அடுப்பில் மூட்டப்படுகின்ற நெருப்பினைவிட இதயத்தில் அதிகமான நெருப்பு எரிகின்றதென்பதை நாங்கள் அறிவோம். வகுப்பறையில் வேதனைகளை வெளிப்படுத்திக்கொள்ளக்கூட முடியமல் இருக்கின்ற பிள்ளைகளை நாங்கள் காண்கிறோம்.
சமூகவலைத்தளங்களில் இந்த பிள்ளைகளின் உணவு வேளைகள் பற்றிய தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார்கள். இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கின்ற குடும்பங்களில் எந்தப் பிள்ளைக்கு கல்வி புகட்டுவது எனும் கேள்வி எழுகின்றது. பாடசாலை செல்லவேண்டிய வயதில் உள்ள பிள்ளைகளில் 40மூ பாடசாலை செல்லமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.
பிறரிடம் உடைகளை வாங்கி அணிகின்ற 20மூ இருக்கிறார்கள். கொழும்பில் மாத்திரமல்ல தொலைதூரப் பிரதேசங்களில்கூட இந்த துன்பப்படுகின்ற ஆசிரியைகள் தமது பிள்ளைக்கு தாயாக அமைவதைவிட பாடசாலையில் அந்த பிள்ளைகளுக்கு தாயாக அமைகிறார்கள். எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியழுப்ப வேண்டுமென்ற ஏகோபித்த எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பினை சுமந்துகொண்டு இங்கு வந்து புதிய மறுமலர்ச்சிக்காக மேலும் ஊக்கத்துடன் செயற்படுவோமென கேட்டுக்கொள்கிறேன்.
தொழில்சார் போராட்டங்களில் ஈடுபட்டாலும் நாட்டின் முன்னிலையில் அளப்பரிய பொறுப்பு எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது . இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஆசிரியரை எங்குதான் துன்பத்திற்கு இலக்காக்கவில்லை? ஒட்டுமொ்த மக்களைப்போன்றே ஆசிரியர்களயும் துன்பத்தில் ஆழ்த்துவதற்கு எதிராக ஒரே கூட்டத்தில்சேர்ந்து கடந்தகாலம் பூராவிலும் போராட்டங்களில் ஈடுபட்டோம்.
இந்த ஒற்றுமையை சிதைக்க நிகழ்கால அரசாங்கமும் எதிர்க்கட்சியும் பல்வேறு சதிவேலைகளை செய்தன. அந்த சதிவேலைகள் அனைத்துமே தோல்விகண்டுள்ளதென்பதை இந்த மாபெரும் தேசிய மாநாடு உறுதிசெய்துள்ளது. இந்த மைதானம் அதிபர்களாலும் ஆசிரியர்களாலும் நிரம்பி வழிவதன் மூலமாக அந்த வெற்றிபற்றிய செய்தியே பறைசாற்றப்படுகின்றது. அனைத்துவிதமான துன்பங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கான சரியான வழியைக் காட்டவே இந்த மாநாடு நடாத்தப்படுகின்றது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய மாநாடு என இதனைக் குறிப்பிட்டாலும் இது அனைத்து ஆசிரியர்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற பாரிய மாநாடாகும். ஆட்சியாளர்கள் முன்னிலையில் மண்டியிடாமல்இ ஆட்சியாளர் முன்னிலையில் இடைநிலை சமாதானங்களின்றிஇ ஆட்சியாளர்கள் கொடுப்பதை எடுத்துக்கொண்டு மௌனிகளாக இருப்பதற்குப் பதிலாக சவால்களை விடுத்து கடந்தகாலம் பூராவிலும் எங்கள் நோக்கங்களை நெருங்கியிருக்கிறோம்.
வரலாற்றுக்காலம் பூராவிலும் தொழில்சார் போராட்டங்களை மேற்கொண்டாலும் எம்மனைவருக்கும் பாரிய செயற்பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மாத்திரம் போராட்டங்களை மட்டுப்படுத்த உலகின் போசாக்கின்மையில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ள பிள்ளைகள் இருக்கின்ற ஒரு நாட்டைச்சேர்ந்த எமக்கு உரிமையில்லை. எல்லாவிதத்திலும் சீர்குலைக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் கல்வியை மாத்திரம் வேறுபடுத்தி எடுக்கமுடியாது.
நாட்டை ஒட்டுமொத்தமாக கட்டியெழுப்புவதில் ஒரு பங்கு கல்விக்கு இருக்கிறது. பாடசாலை மட்டத்தில் பாடசாலை சபைகளை கட்டியெழுப்பி மறுமலர்ச்சி யுகத்திற்கு தொடக்கத்தை பெற்றுக்கொடுக்கின்ற செப்டெம்பர் 21 ஆந் திகதிய வெற்றிக்காக நாமனைவரும் எம்மை அர்ப்பணிப்போம். எமது நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் படையணி நியாயமான சம்பளத்தைக்கோரி வீதிகளில் போராடிய யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து கௌரவமான ஆசிரியர் சேவையை உறுதிசெய்துகொள்வதற்காக அனைவரும் அணிதிரள்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM