(நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (4) நடைபெற்றுவரும் இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சமநிலையில் முடிவடைந்தது.
எனினும் அப் போட்டியில் மத்தியஸ்தர்கள் சுப்பர் ஓவர் முறைமையைப் கவனத்தில் கொள்ளாமல் விட்டது குறித்து ஐசிசி தனது கரிசiணை வெளியிட்டுள்ளது.
இந் நிலையில் தொடரும் போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தால் சுப்பர் ஓவர் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது போட்டி சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை அடைய இரண்டு அணிகளும் இன்று முயற்சிக்கவுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை உபாதைக்குள்ளான வனிந்து ஹசரங்க தொடரும் போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மொஹமத் ஷிரா ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவர்களுக்கு பதிலாக கமிந்து மெண்டிஸ், ஜெவ்றி வெண்டர்சே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணிகள்
இலங்கை: சரித் அசலன்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, அக்கில தனஞ்சய, அசித்த பெர்னாண்டோ, ஜெவ்றி வெண்டர்சே.
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, வொஷிங்டன் சுந்தர், ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், அக்சார் பட்டேல், ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், மொஹமத் சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM